ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

உலக நீச்சல்: இந்திய வீரர் ஸ்ரீஹரி நடராஜ் நிகழ்த்திய ஹாட்ரிக் இந்திய சாதனைகள்

உலக நீச்சல்: இந்திய வீரர் ஸ்ரீஹரி நடராஜ் நிகழ்த்திய ஹாட்ரிக் இந்திய சாதனைகள்

அபுதாபியில் நடைபெறும் உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 100 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ் புதிய சாதனை படைத்துள்ளார்.

 • 1 minute read
 • Last Updated :

  அபுதாபியில் நடைபெறும் உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 100 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ் புதிய சாதனை படைத்துள்ளார்.

  ஷார்ட் கோர்ஸ் உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகள் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான 100 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ் புதிய சாதனை படைத்துள்ளார்.

  இந்த போட்டியின் தகுதி சுற்றில் பெங்களூருவைச் சேர்ந்த ஸ்ரீஹரி நடராஜ், 48.65 வினாடியில் இலக்கை எட்டினார். அனைத்து தகுதி சுற்றுகளின் முடிவில் ஸ்ரீஹரி நடராஜ் 38-வது இடத்தை பிடித்தார். இதனால் இந்த தொடரின் அரையிறுதி சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பை அவர் இழந்தார்.

  இருப்பினும் உலக நீச்சல் சாம்பியன்ஷிப் தொடரில் குறைந்த தூரம் கொண்ட நீச்சல் போட்டிக்கான பிரிவில் வேகமாக இலக்கை அடைந்த இந்திய வீரர் என்ற பெருமையை ஸ்ரீஹரி நடராஜ் பெற்றுள்ளார்.

  டோக்கியோ ஒலிம்பிக்ஸில் சஜன் பிரகாஷுக்குப் பிறகு ஏ தகுதி நேரத்தைக் கடந்து தகுதி பெற்ற நடராஜ், தற்போது கடந்த வாரத்தில் 50 மீ, 100 மீ பேக் ஸ்ட்ரோக் நீச்சலில் இந்திய சாதனைகளைப் படைத்தார்.

  டெல்லியைச் சேர்ந்த குஷக்ரா ராவத் 15:07.86 என்று ஆடவர் 1,500 மீ ஃப்ரீஸ்டைலில் முடிந்து மொத்தமாக 21வது இடத்தில் முடிந்தார். ஷார்ட் கோர்ஸ் நீச்சல் போட்டி என்பது 25 மீ நீச்சல் குளத்தில் நடப்பது. இதுமரபான நீச்சல் குளங்களிலிருந்து வேறுபட்டது. 50 மீ நீச்சல் குளம்தான் லாங் கோர்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

  Also Read: ஜோக்காகச் சொன்னது விபரீதமானது: சர்ச்சையில் சிக்கிய கங்குலி

  நீச்சல் போட்டிகளைப் பொறுத்த மட்டில் நேஷனல் அக்வாட்டிக் சாம்பியன்ஷிப் போட்டிகளில் சாதிக்கும் நேரம்தான் தேசிய சாதனைகள் பட்டியலில் சேர்க்க்ப்படும். மற்ற போட்டித் தொடர்களில் சாதிக்கும் நேரங்கள் ‘சிறந்த இந்திய நேரம்’ என்ற சாதனையில்தான் சேர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

  First published: