• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஸ்விகி மூலமாக ஆவின் தயாரிப்புகளை வீடுகளில் விநியோகிக்க ஏற்பாடு

ஸ்விகி மூலமாக ஆவின் தயாரிப்புகளை வீடுகளில் விநியோகிக்க ஏற்பாடு

கோப்புப்படம்

கோப்புப்படம்

சேலம் மாநகர எல்லைக்குள் ஆவின் பால் பொருட்கள் ஸ்விக்கி நிறுவனம் மூலம் வரும் 29-ம் தேதி முதல் இல்லங்களுக்கு நேரடியாக விநியோகிக்கப்பட உள்ளது.

  • Share this:
    இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு புதிய நடைமுறைகளை மத்திய மாநில அரசுகள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. அதேபோல் அரசு பொதுத்துறை நிறுவனங்களும் பல்வேறு வகையான புதிய நடைமுறைகளையும் அமல்படுத்தி வருகின்றன.

    அதன்படி சேலம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு நற்செய்தியாக சேலம் ஆவின் நிர்வாகத்தின் சார்பில் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி சேலம் ஆவின் நிர்வாகத்தின் மூலம் ஆவின் பொருட்கள் அனைத்தும் இல்லங்களுக்கே கொண்டு செல்லும் வகையில் ஸ்விகி நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.



    இதன் மூலம் பொதுமக்களுக்கு தேவையான ஆவின் பொருட்கள் உடனடியாக தங்கு தடையின்றி கிடைக்கின்ற வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆவின் பொது மேலாளர் விஜய்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார்.

    பொதுமக்கள் வெளியே வராமல் வீடுகளில் இருந்தே பால் பொருட்கள் பெறும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையால், எந்தவித விலை மாற்றம் இருக்காது எனவும், பொதுமக்களுக்கு ஆவின் பொருட்களை அதிக அளவில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் சேலம் ஆவின் புதிய உச்சத்தை தொடும் என்றும் தெரிவித்தார்.

    மேலும் தூய்மையான பால் பொருட்கள் மற்றும் தூய்மையான பசும்பால், பொது மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சேலம் ஆவின் பெருமை கொள்வதாகவும் தெரிவித்தார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: