Home /News /tamil-nadu /

ஊதியம் மற்றும் சலுகைகள் குறைப்பு - ஸ்விகி ஊழியர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம்

ஊதியம் மற்றும் சலுகைகள் குறைப்பு - ஸ்விகி ஊழியர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம்

ஸ்விகி ஊழியர்கள் பூந்தமல்லியில் ஆர்ப்பாட்டம்

ஸ்விகி ஊழியர்கள் பூந்தமல்லியில் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் ஸ்விகி ஊழியர்கள் பூந்தமல்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விகியில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு நிர்வாகம் தற்போது சம்பளம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை குறைத்து விட்டதாகவும், இதனால் ஆர்டர்கள் குறைந்து வருவதால் வருவாய் இழப்பு ஏற்படுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியில் 200க்கும் மேற்பட்ட ஸ்கிவி ஊழியர்கள் சாலையோரம் நின்று சமூக விலகளோடு நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    Also read... தொடர் வீழ்ச்சிக்கு பின்னர் சற்றே உயர்ந்த தங்கத்தின் விலை - இன்றைய நிலவரம் என்ன?

    இதில் முன்பெல்லாம் ஒரு நாளைக்கு ரூ.500 முதல் ரூ.700 வரை வருமானம் வந்ததாகவும் தற்போது ஊதியம் குறைப்பு பல்வேறு சலுகைகளை குறைத்து விட்டதால் தினந்தோறும் ரூ.200 வரை மட்டுமே வருகிறது.



    இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தங்களுக்கு பழைய முறைப்படி ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Swiggy

    அடுத்த செய்தி