ஒரு டெலிவரிக்கு 36 ரூபாயிலிருந்து 15 ரூபாயாக குறைப்பு - அண்ணா அறிவாலயத்தில் மனு அளித்த ஸ்விக்கி ஊழியர்கள்

சென்னையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில், ஊதியத்தைக் குறைத்தால் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஸ்விக்கி ஊழியர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

ஒரு டெலிவரிக்கு 36 ரூபாயிலிருந்து 15 ரூபாயாக குறைப்பு - அண்ணா அறிவாலயத்தில் மனு அளித்த ஸ்விக்கி ஊழியர்கள்
ஸ்விகி ஊழியர்கள்
  • Share this:
பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி ஊழியர்கள் ஊதிய குறைப்பைக் கண்டித்து கடந்த சில நாட்களாக போரட்டம் நடத்திவருகின்றனர். இந்த நிறுவனத்தில் பள்ளி படிப்பு முடித்தவர்கள் தொடங்கி பட்டதாரிகள் வரை வேலைசெய்கிறார்கள்.

நிறுவனம் தொடங்கப்பட்ட தொடக்கத்தில் 4கிமீ தொலைவிற்குள் டெலிவரிக்கு 36ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்ட நிலையில் அது படிப்படையாக குறைக்கப்பட்டு தற்போது 15 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர் ஊழியர்கள். நாள் ஒன்றுக்கு சராசரியாக 25 டெலிவரி கொடுப்பதாகவும் அதன் மூலம் ஆயிரம் ரூபாய் வரை சம்பாதித்து வந்த நிலையில் ஊதிய குறைப்பால் 300 ரூபாய் வரை மட்டுமே சம்பாதிக்க முடிவதாகவும்  குற்றம் சாட்டுகின்றனர்.

சென்னையில் மட்டும் 7000த்திற்கும் அதிமான ஊழியர்கள் இந்த நிறுவனத்தில் வேலை செய்துவரும் ஊதிய குறைப்பு தங்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க வந்த ஸ்விக்கி ஊழியர்கள் தங்கள் கோரிக்கை அடங்கிய மனுவை அண்ணா அறிவாலயத்தில் வழங்கிச் சென்றனர் .
First published: August 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading