Home /News /tamil-nadu /

''சாதி - மத வன்ம பதிவுகளை பதிவிடுவோரை முளையிலேயே களையெடுக்க வேண்டும்'' : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

''சாதி - மத வன்ம பதிவுகளை பதிவிடுவோரை முளையிலேயே களையெடுக்க வேண்டும்'' : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சாதி - மத வக்ரம் பிடிச்சவங்க தொழில் நுட்பத்தை அழிவுக்குப் பயன்படுத்தி- சமூகத்துல குழப்பம் ஏற்படுத்தப் பாக்குறாங்க.

சாதி - மத வக்ரம் பிடிச்சவங்க தொழில் நுட்பத்தை அழிவுக்குப் பயன்படுத்தி- சமூகத்துல குழப்பம் ஏற்படுத்தப் பாக்குறாங்க.

சாதி - மத வக்ரம் பிடிச்சவங்க தொழில் நுட்பத்தை அழிவுக்குப் பயன்படுத்தி- சமூகத்துல குழப்பம் ஏற்படுத்தப் பாக்குறாங்க.

  சமூக வலைதளங்களில் சாதி - மத வன்ம பதிவுகளை பதிவிடுவோரை முளையிலேயே களையெடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

  மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாட்டின் இறுதி நாளான இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது-

  குற்றங்களோட விழுக்காட்டைக் குறைப்பது அல்ல, குற்றங்களே நடக்காத சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பது தான் உங்கள் எல்லாரையும் நான் கேட்டுக் கொள்ள விரும்புவது.

  சாதி மோதல்களை - சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மட்டும் பார்க்காதீர்கள் என்று நான் கேட்டுக்கிறேன். ஏனென்றால் அது சமூக ஒழுங்குப் பிரச்சினை.

  படிக்காத இளைஞர்களால் மட்டுமல்ல - படித்து முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் ஊரில் இருக்குற ஒரு சிலராலும் - இதுபோன்ற மோதல்கள் உருவாகக் கூடிய சூழ்நிலை உருவாகிறது.
  இதுபோன்ற இளைஞர்களைக் கண்டறிந்து மனமாற்றம் செய்யணும். அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரணும்.

  இதையும் படிங்க - ராஜபக்சேவின் கூட்டாளி சுமந்திரனை முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்கக்கூடாது: வ.கௌதமன் வலியுறுத்தல்

  ஆக்கபூர்வமான வழிகளில், விளையாட்டுப் போட்டிகளில், ஊர்க்காவல் படைகளில் என அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.
  பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து செயல்படுறதா நெல்லை எஸ்.பி. சொன்னார். அதேபோல் மற்ற மாவட்ட நிர்வாகமும் செயல்படணும்.

  இதேபோல் மத மோதல்கள் குறித்து - கன்னியாகுமரி மாவட்டக் கண்காணிப்பாளர் பேசினார். மத மோதல்கள் குறித்து கோவையில் இயங்குவதைப் போல சிறப்புப் பிரிவு அனைத்து மாவட்டங்களிலும் அமையணும்னு அவர் சொன்ன ஆலோசனை நிச்சயமாக பரிசீலிக்கப்படும்.

  இதையும் படிங்க - ஹிட்லர், முசோலினியின் அவதாரம் தான் ஸ்டாலின் - ஜெயக்குமார் ஆவேசம்

  ஒரு காலத்துல மதம் என்பது, மதம் சம்பந்தப்பட்டதா மட்டுமே இருந்தது. இப்போது அது அரசியல் நோக்கமுள்ளதாக சிலரால் மாற்றப்பட்டு விட்டது.

  எனவே அரசியல் உள்நோக்கத்தோடு மத மோதல்களை திட்டமிட்டு உருவாக்குகிறார்கள், இதை தடுத்தாக வேண்டும். சாதி மோதல்களுக்கும் - மதப் பிரச்னைகளுக்கும் சமூக வலைத்தளங்கள் முக்கியமான காரணமாக இருக்குறதா எல்லோரும் சொன்னீர்கள். அது உள்ளபடியே முழுமையான உண்மை தான்.

  இது நவீன தொழில்நுட்ப யுகம். இந்தத் தொழில் நுட்பத்தை நல்லதுக்கும் பயன்படுத்தலாம், அழிவுக்கும் பயன்படுத்தலாம்.
  சாதி - மத வக்ரம் பிடிச்சவங்க அழிவுக்குப் பயன்படுத்தி-
  சமூகத்துல குழப்பம் ஏற்படுத்தப் பாக்குறாங்க. இவங்கள முளையிலேயே நாம் களையெடுக்க வேண்டும்.
  இப்படிப்பட்ட பதிவுகளை போடுறவங்க மேல உடனடியாக நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.

  சோஷியல் மீடியா சென்டருக்கு புதிய அலுவலகம் தேவை என்ற- திருவள்ளூர் எஸ்.பி.யின் கோரிக்கையை நிச்சயமாக நிறைவேற்றுவோம். மத்திய அரசில் இருப்பதைப் போல ‘National Media Analytics Center’, ‘Social Media Lab’ - ஆகியவற்றை உருவாக்க வேண்டும் என்று சொன்னார்.

  சோஷியல் மீடியா மூலமா நடக்குற இந்த வன்மங்களுக்கு-
  எல்லா வகையிலும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

  இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
  Published by:Musthak
  First published:

  Tags: MK Stalin

  அடுத்த செய்தி