Home /News /tamil-nadu /

உயிருக்கு ஆபத்து - குடும்பத்துடன் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த ஸ்வீட் கடை உரிமையாளர்

உயிருக்கு ஆபத்து - குடும்பத்துடன் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த ஸ்வீட் கடை உரிமையாளர்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

மயிலாடுதுறையில் ஸ்வீட் கடை உரிமையாளர் ஒருவர் தன் உயிருக்கு ஆபத்து என குடும்பத்துடன் நாகப்பட்டினம் கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை தாலுக்கா சீனிவாசபுரம் மெயின் ரோட்டில் ஸ்வீட் கடை நடத்தி வருபவர் அருண். அதே பகுதியைச் சேர்ந்த மனோன்மணி என்பவருக்குச் சொந்தமான இடத்தில் கடந்த 5 வருடமாக வாடகைக்கு கடை நடத்தி வருகிறார்.

மேற்படி கட்டடத்திற்கு 50 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்து, மாதம் 7 ஆயிரம் ரூபாய் வாடகை தவறாமல் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் கடை உரிமையாளர் மனோன்மணியம் மருமகனான சிதம்பரத்தைச் சேர்ந்த ஆளுங்கட்சி பிரமுகர் கிருஷ்ணன் என்பவரைத் தூண்டிவிட்டு கடையைக் காலி செய்யுமாறு தினமும் மிரட்டி வருவதாக அருண் நாகை மாவட்ட ஆட்சியரிடம் இன்று குடும்பத்தோடு வந்து புகார் மனு அளித்தார்.

Also see:

மேலும், முறையாக பத்திரம் எழுதி கொடுத்தும் காலக்கெடு முடிவடையாத நிலையில் தினமும் கடையைக் காலி செய்யுமாறும், இல்லையென்றால் கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டுவதாக அருண் கூறியுள்ளார். எனவே, வாடகைக் கடை மற்றும் இடத்தை 20 லட்சம் ரூபாய் செலவு செய்து மேம்படுத்தி வைத்திருப்பதாகக் கூறியுள்ள அருண், தனக்கும் தனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.


தற்போது மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ள ஸ்வீட் கடை உரிமையாளர் அருண் மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திமுகவைச் சேர்ந்த பால அருட்செல்வன் மற்றும் திமுகவினரை வைத்து தன்னை மிரட்டி வருவதாக சில தினங்களுக்கு முன்பு கடையின் உரிமையாளர் மனோன்மணியம் மாவட்ட ஆட்சியரிடம் பாதுகாப்பு கேட்டு புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Published by:Rizwan
First published:

Tags: District collectors, Nagapattinam

அடுத்த செய்தி