திமுக கூட்டணி கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் : துறவிகள் சங்கத் தலைவர் வேண்டுகோள்

சுவாமி ராமானந்தா

திமுகவினர் தமிழை வளர்க்கிறோம் என்ற பெயரில் இந்து தெய்வங்கள், வழிபாட்டு முறைகளை இழிவுபடுத்துகின்றனர் என்றும் திமுகவையும் அதன் கூட்டணி கட்சிகளையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனவும் அகில பாரதிய துறவிகள் சங்கத் தலைவர் சுவாமி ராமானந்தா கூறியுள்ளார்.

 • Share this:
  திமுகவினர் தமிழை வளர்க்கிறோம் என்ற பெயரில் இந்து தெய்வங்கள், வழிபாட்டு முறைகளை இழிவுபடுத்துகின்றனர் என்றும் திமுகவையும் அதன் கூட்டணி கட்சிகளையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனவும் அகில பாரதிய துறவிகள் சங்கத் தலைவர் சுவாமி ராமானந்தா கூறியுள்ளார்.

  இது குறித்து அவர் கூறுகையில், “நாயன்மார்களும், ஆழ்வார்களும் பிறந்த ஆன்மிக பூமி தமிழகம். திமுகவினர் தமிழை வளர்க்கிறோம் என்ற பெயரில், இந்து தெய்வங்கள், வழிபாட்டு முறைகளை இழிவுபடுத்துகின்றனர்.

  திருமணச் சடங்குகளை கொச்சைப்படுத்துகின்றனர். கந்தசஷ்டி கவசம் போன்ற பக்தி இலக்கியங்களை, தரம் தாழ்ந்து விமர்சிக்கின்றனர். பாரம்பரிய வழக்கத்திற்கு எதிராகவும், சனாதன தர்மத்தை அழிக்கவும் திட்ட மிடுகின்றனர். ஆனால், தேர்தல் வந்ததும் இந்துக்களிடம் ஓட்டு கேட்டு வருகின்றனர்.

  திருநெல்வேலியில், 2018ல் நடந்த தாமிரபரணி புஷ்கர விழாவுக்கு தடை கோரிய, திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். தற்போதைய திருநெல்வேலி தொகுதி, பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், தாமிரபரணி புஷ்கர விழாவிற்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டார். எனவே, அவருக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும். மதச்சார்பற்ற அரசு என்பவர்கள், கிறிஸ்துவ ஆலயங்கள், மசூதிகளில் தலையிடுவதில்லை. ஆனால், ஏன் இந்து கோயில் நிர்வாகத்தில் மட்டும் தலையிடுகின்றனர்.

  Must Read : கோவையில் பாஜக பேரணியின்போது கடை மீது கல் வீச்சு: அதே கடையில் புதிய செருப்பு வாங்கிய கமல்

   

  எனவே, கோயில்களை நிர்வகிக்க, ஓய்வு பெற்ற நீதிபதிகள், நேர்மையான புரவலர்களை கொண்ட தனி வாரியம் ஏற்படுத்த வேண்டும். இந்துக்களை கேவலப்படுத்தியவர்களுக்கு எதிராக, ஓட்டுப் போடவேண்டும்” இவ்வாறு கூறினார் சுவாமி ராமானந்தா.
  Published by:Suresh V
  First published: