• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அதிமுக கொடி குறித்து எஸ்.வி.சேகர் விமர்சனம் - அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

அதிமுக கொடி குறித்து எஸ்.வி.சேகர் விமர்சனம் - அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக கொடி குறித்து எஸ்.வி.சேகர் விமர்சித்ததற்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    ”அதிமுக உருப்பட வேண்டுமென்றால் கொடியில் இருந்து அண்ணா படத்தை நீக்க வேண்டும்” என சர்ச்சைக்குரிய வகையில் எஸ்.வி.சேகர் பேசியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், மயிலாப்பூர் அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்த போது வாங்கிய ஊதியத்தையும் தற்போது வாங்கும் ஓய்வூதியத்தையும் அவர் திருப்பித் தர தயாரா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

    கடலில் செயற்கை பவளப்பாறைகளை நிறுவும் நிகழ்ச்சிக்கு முன் காசிமேட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், இந்தியாவிலேயே மீன் உற்பத்தியில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

    Also read: கொரோனா சமூக பரவலாக மாறிவிட்டதா? - 12 ஆயிரம் பேரின் ரத்த மாதிரிகளில் ஆய்வு

    பவளப்பாறைகள் அமைப்பதன் மூலம் மீன்களின் இனப்பெருக்கம் அதிக்கரிக்கும் என தெரிவித்தார். திமுகவில் குடும்ப அரசியல் நடைபெறுவதாக விமர்சித்த அவர், அதிமுக கொடி குறித்து எஸ்.வி.சேகர் விமர்சித்தற்கு கண்டனம் தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: