Durga Stalin | மு.க.ஸ்டாலின் முதல்வரானதற்காக துர்கா ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த எஸ்.வி.சேகர்!

ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் கண்கலங்கிய துர்கா ஸ்டாலின்

திமுக நாத்திக கொள்கைகளை கொண்டுள்ளதாக எதிர்தரப்பினர் விமர்சித்து வந்தாலும் துர்கா ஸ்டாலின் அடிக்கடி கோவில்களுக்கு செல்லும் பழக்கமுடையவர்.

  • Share this:
மு.க.ஸ்டாலின் வெற்றிக்கு காரணமாக மனைவி துர்கா ஸ்டாலினின் பக்தி அமைந்ததாக நடிகர் எஸ்.வி.சேகர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் இன்று காலை பொறுப்பேற்று கொண்டார். மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிராமணம் செய்து வைத்தார்.

முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள், கட்சித் தலைவர்கள், நடிகர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர், மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வரானதற்காக அவருடைய மனைவி துர்கா ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவருடைய வாழ்த்து செய்தியில் துர்கா ஸ்டாலினின் பக்தியின் காரணமாக ஸ்டாலினுக்கு வெற்றி கிடைத்தது, எனவே பக்தியுடன் இருந்து ஸ்டாலினுக்கு வெற்றியை தேடி கொடுத்ததாக துர்கா ஸ்டாலினுக்கு எஸ்.வி.சேகர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



எஸ்.வி.சேகர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, “ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறார் என்பதை நிரூபித்தவர் திருமதி துர்காஸ்டாலின்.ஒரு குடும்பத்தில் ஒருவர் 100% பக்தியுடன் இருந்தால் அந்தக்குடும்பத்துக்கே உயர்வு சேரும் என வெற்றியை கொண்டு சேர்த்த துர்கா அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஆசிகள்.” என குறிப்பிட்டுள்ளார்.

தந்தை ஸ்டாலினுக்கு மகன் உதயநிதி அளித்த அன்பு பரிசு!






திமுக நாத்திக கொள்கைகளை கொண்டுள்ளதாக எதிர்தரப்பினர் விமர்சித்து வந்தாலும் துர்கா ஸ்டாலின் அடிக்கடி கோவில்களுக்கு செல்லும் பழக்கமுடையவர். தேர்தல் அறிவிப்புக்கு பிறகு கூட அவர் தமிழகத்தின் பல்வேறு முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனம் செய்து வந்தார்.

மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதும் துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர்


இன்று முதல்வராக ஸ்டாலின் பதிவியேற்பதை பார்த்த அவரது மனைவி துர்கா ஸ்டாலின் கண்கலங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: