• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அக்காள் கணவருடன் போனில் பேச்சு.. ஆத்திரத்தில் மனைவியை தீர்த்துக்கட்டிய கணவன்

அக்காள் கணவருடன் போனில் பேச்சு.. ஆத்திரத்தில் மனைவியை தீர்த்துக்கட்டிய கணவன்

கொலை செய்யப்பட்ட பெண்

கொலை செய்யப்பட்ட பெண்

புவனேஸ்வரியின் சகோதரனுக்கு போன் செய்து மச்சான் உன் தங்கச்சியை கொன்று விட்டேன் என போனில் கூறியுள்ளார்.

  • Share this:
    சென்னையில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன் அவரை கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

    சென்னை கிண்டியை சேர்ந்தவர் நித்யானந்தன். இவர் வேன் டிரைவராக வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கும் புவனேஸ்வரி என்ற பெண்ணுக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. புவனேஸ்வரி தனது அக்கா கணவருடன் போனில் அடிக்கடி பேசுவது நித்யானந்தனுக்கு பிடிக்கவில்லை. மனைவியின் நடத்தையின் மீதும் நிதியானந்தனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அக்காள் கணவருடன் நீ மணிக்கணக்கில் போனில் பேசுவது தனக்கு பிடிக்கவில்லை என புவனேஸ்வரியிடமே கூறியுள்ளார். போனில் பேசுவதை நிறுத்துமாறு கண்டிப்புடன் கூறியுள்ளார்.

    Also Read: மாப்பிள்ளை கருப்பா இருக்காரு.. கல்யாணத்துக்கு மறுத்த இளம்பெண்ணை கோடரியால் வெட்டி கொன்ற அண்ணன்

    புவனேஸ்வரி தனது அக்கா கணவருடன் போனில் பேசுவதை நிறுத்தியதாக இல்லை. இதன்காரணமாக கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புவனேஸ்வரி போனில் பேசியதைக் கண்டு ஆத்திரமடைந்துள்ளார். இதனையடுத்து கணவன் மனைவி இடையே சண்டை வந்துள்ளது.

    Also Read:  டெலிவரிபாய் டூ செயின் திருடன்.. மனைவியின் பேராசையால் தடம்மாறிய கணவன்

    மனைவி மீது ஆத்திரத்தில் இருந்த நித்யானந்தன் கத்தியைக் கொண்டு சரமாரியாக அவரை குத்திக்கொலை செய்துள்ளார். இதனையடுத்து புவனேஸ்வரியின் சகோதரனுக்கு போன் செய்து மச்சான் உன் தங்கச்சியை கொன்று விட்டேன் என போனில் கூறியுள்ளார். நேராக கிண்டி காவல்நிலையம் வந்து நிதயானந்தன் சரணடைந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார் புவனேஸ்வரியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறை விசாரணையில், நித்யானந்தனும் புவனேஸ்வரியின் அண்ணனும் நண்பர்கள் என்பது தெரியவந்துள்ளது. நிதியானந்தன் பெண் கேட்டு வந்ததால் தனது தங்கையை நண்பருக்கு திருமணம் செய்துவந்துள்ளார். மனைவி மீதான சந்தேகம் தற்போது கொலையில் முடிந்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: