• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வாடிப்பட்டியில் பேக்கரி தாக்கப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய நபர் திமுகவில் இருந்து நீக்கம்

வாடிப்பட்டியில் பேக்கரி தாக்கப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய நபர் திமுகவில் இருந்து நீக்கம்

வாடிப்பட்டி பேக்கரி தாக்குதல்

வாடிப்பட்டி பேக்கரி தாக்குதல்

மதுரை வாடிப்பட்டியில் அதிமுக பிரமுகர் பேக்கரி தாக்கப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய பி.பிரகாசம் என்பவர் திமுகவில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

  • Share this:
மதுரை வாடிப்பட்டியில் அதிமுக பிரமுகர் பேக்கரி தாக்கப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய, வாடிப்பட்டி பேரூர் திமுக செயலாளராக இருந்த பி.பிரகாசம் அக்கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில், அதிமுக பிரமுகருக்கு சொந்தமான பேக்கரி, கொரோனா முழு ஊரடங்கால் அடைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கையில் பயங்கர ஆயுதங்களுடன் அந்த பேக்கரி வாசலில் நுழைந்த திமுக மாணவரணி துணைச் செயலாளராக இருந்த அசோக், தனது ஆதரவாளர்களுடன் பேக்கரி கடை முன் போடப்பட்டிருந்த கண்ணாடிகளை அடித்து நொறுக்கி, மேஜை, இருக்கைகளை தூக்கி வீசி சேதப்படுத்தினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், அந்த வளாகத்தில் இருந்த அரசு வங்கி ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கி, வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களையும் அடித்து நொறுக்கிவிட்டு பின்னர் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து, அங்கு சென்ற வாடிப்பட்டி காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட அசோக் உள்ளிட்ட 4 பேரை தேடி வந்தனர்.  அந்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த தாக்குதல் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், நெல் கொள்முதல் நிலையத்தில், மரியாதை கொடுப்பதில் இரு தரப்பினருக்கும் இடையே சச்சரவு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இந்த முன் விரோதம் காரணமாக அசோக், அதிமுகவினருக்கு சொந்தமான கடையை அடித்து நொறுக்கி தப்பியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, பேக்கரி மீது தாக்குதல் நடத்திய வழக்கில் அசோக், அறிவழகன் உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Must Read : கட்டுப்பாடுகளை தளர்த்துவது பேரழிவை ஏற்படுத்தும் - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

இந்நிலையில், இந்த விவகாரத்தில் தொடர்புடைய “மதுரை வடக்கு மாவட்டம், வாடிப்பட்டி பேரூர் செயலாளர் பி.பிரகாசம், கழக கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் ” என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: