நகைக் கடனை நிறுத்தி வைப்பது விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும் - ராமதாஸ் எச்சரிக்கை

விவசாயிகளுக்கான நகைக் கடனை நிறுத்தி வைப்பது விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும் என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நகைக் கடனை நிறுத்தி வைப்பது விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும் - ராமதாஸ் எச்சரிக்கை
பாமக நிறுவனர் ராமதாஸ்.
  • Share this:
கூட்டுறவு சங்கம், வங்கிகளில் நகைக் கடன் வழங்குவதை உடனடியாக தொடங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியை தொடங்கியுள்ள விவசாயிகளுக்கு வாரத்திற்கு ஒருமுறையாவது கணிசமான தொகை தேவைப்படுவதுடன், தனியார் பள்ளி, கல்லூரிகளில் கல்வி கட்டணம் செலுத்த பெற்றோருக்கு பணம் தேவைப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கிராமப்புற ஏழைகள், விவசாயிகளின் உயிர்நாடியாக திகழும் நகைக் கடனை நிறுத்தி வைப்பது விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Also read: சிவகங்கையில் மணல் கொள்கை புகார் - லாரிகளை சிறைபிடித்த கிராம மக்கள்


கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்கள் மூலம் குறைந்த வட்டியில் நகைக்கடன் உள்ளிட்ட புதிய கடன் திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று கடந்த ஏப்ரல் மாத இறுதியில் தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், அடுத்த இரு மாதங்களில் நிலைமை தலைகீழாக மாறியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கூறியுள்ள ராமதாஸ், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் மூலம் நகைக்கடன் வழங்குவதை உடனே தொடங்கும்படி கூட்டுறவுத்துறைக்கு முதலமைச்சர் ஆணையிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 
First published: July 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading