Home /News /tamil-nadu /

Chennai High Court | நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை மீண்டும் அனுமதித்தால் சஸ்பெண்ட் - அரசு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

Chennai High Court | நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை மீண்டும் அனுமதித்தால் சஸ்பெண்ட் - அரசு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அதிகாரிகளின் கடமை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அதிகாரிகளின் கடமை என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், மீண்டும் ஆக்கிரமிப்புகள் முளைத்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் பல்வேறு நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்குகள், பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    இதையும் படிங்க: பெண்ணின் உயிரைப் பறித்த கள்ளக்காதல்.. - பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்

    அப்போது, தலைமைச் செயலாளர் அறிக்கையின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதால், அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் அகற்ற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரித்த நீதிபதிகள், சர்வே எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அதிகாரிகளுக்கு தெரியும் என்பதால் நீர்நிலைகளை ஆக்கிரமிப்புகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அதிகாரிகளின் கடமை என தெரிவித்தனர்.

    Also read: திண்டுக்கல்லில் பள்ளி மாணவி எரித்துக்கொலை - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

    ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பின்னும் மீண்டும் முளைத்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சஸ்பெண்ட் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் எச்சரித்த நீதிபதிகள், இதுசம்பந்தமாக தகுந்த உத்தரவை பிறப்பிக்க ஆலோசனைகளை வழங்க மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்களை கேட்டுக் கொண்டனர்.

    இதையடுத்து, மனுதாரர் தரப்பில், மாவட்ட அளவில் குழு அமைக்க வேண்டும் என்ற ஆலோசனையை நீதிபதிகள் நிராகரித்துவிட்டனர். குழு அமைப்பதால் எந்த பயனும் இல்லை என்றும் குறிப்பிட்டனர்.

    மேலும், இணையதளத்தில் சர்வே எண்ணை குறிப்பிட்டால் மட்டுமே நீர்நிலைகளின் விவரங்கள் தெரிய வருகிறது என்பதால், நீர்நிலைகள் குறித்த அனைத்து விவரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.

    அனைத்து தரப்பு வழக்கறிஞர்கள் கருத்துக்களை கேட்ட நீதிபதிகள், வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

    இதையும் படிங்க: வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு ரத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Chennai High court

    அடுத்த செய்தி