உதயநிதி ஸ்டாலினுக்கு சுஷ்மா ஸ்வராஜ் மகள் ட்விட்டரில் கண்டனம்

உதயநிதி ஸ்டாலினுக்கு சுஷ்மா ஸ்வராஜ் மகள் ட்விட்டரில் கண்டனம்

உதயநிதி ஸ்டாலின்

சுஷ்மா ஸ்வராஜ் பிரதமர் நரேந்திர மோடியால்தான் உயிரிழந்தார் என்று பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு, சுஷ்மா ஸ்வராஜ் மகள் பன்சுரி ஸ்வராஜ் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  சுஷ்மா ஸ்வராஜ் பிரதமர் நரேந்திர மோடியால்தான் உயிரிழந்தார் என்று பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு, சுஷ்மா ஸ்வராஜ் மகள் பன்சுரி ஸ்வராஜ் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திமுக வேட்பாளர் கயல்விழியை ஆதரித்து பேசிய உதயநிதி ஸ்டாலின் ‘சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜேட்லி ஆகியோர் நரேந்திர மோடியால் தான் உயிரிழந்தனர்’ என பேசியிருந்தார்.

  இதற்கு சுஷ்மா ஸ்வராஜ் மகள் பன்சுரி ஸ்வராஜ் தனது டிவிட்டர் பதிவில், “என் தயாரின் நினைவுகளை உங்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்துவதை நிறுத்துங்கள். நீங்கள் கூறியது அனைத்தும் பொய்! பிரதமர் நரேந்திர மோடி, என் அம்மா மீது அளவற்ற மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். எங்கள் வாழ்வின் மிகவும் கடினமான கால கட்டங்களில் பிரதமரும் கட்சியும்தான் எங்களுக்கு உதவி புரிந்தனர். உங்களின் பேச்சு எங்களை வேதனைப்படுத்துகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.  தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அரசியல் களம் மிகுந்த பரபரப்பாகக் காணப்படுகின்றது.
  Published by:Suresh V
  First published: