அரிய வளைய சூரிய கிரகணம்: தமிழ்நாட்டில் தெரியுமா?

சூரிய கிரகணம்

உலகின் பிற பகுதிகளில் உள்ள மக்கள் சூரியனின் மேற்பரப்பில் ஒரு இருண்ட நிழலை மட்டுமே காண்பார்கள். இது ஒரு பகுதி கிரகணம். அதனால் ‘நெருப்பு வளையத்தை’ பார்க்க இயலாது.

 • Share this:
  வானில் தோன்றும் அரிய நிகழ்வான வளைய சூரிய கிரகணம் இன்று ஏற்பட உள்ளது. சூரியனுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் ஒரே நேர் கோட்டில் வருவதால் சூரிய கிரகண நிகழ்வு ஏற்படுகிறது. அதேசமயம், பூமியில் இருந்து சந்திரன் அதிக துாரத்தில் இருக்கும் போது இந்த கிரகணம் ஏற்படுவதால், சூரியன் வளையம் போன்று காட்சியளிப்பதால் இது வளைய சூரிய கிரகணம் எனப்படுகிறது.

  இந்திய நேரப்படி பிற்பகல் 1 .42 மணி முதல் மாலை 6.41 மணி வரை, சூரிய கிரகணம் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் அருணாச்சலபிரதேசம் லடாக்கில் மட்டும் சூரிய கிரகணம் பகுதியாக தெரியும். தமிழ்நாட்டில் தெரியாது.

  பொதுமக்கள் தொலைநோக்கி மற்றும் சூரியக் கண்ணாடி ஆகியவற்றை பயன்படுத்தி, கிரகணத்தை பார்க்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  வளைய சூரிய கிரகணம் என்றால் என்ன?:

  வளையவடிவச் சூரிய கிரகணத்தைக் கங்கண சூரிய கிரகணம் என்றும் கூறுகின்றனர்.

  சந்திரன் சூரியனை மறைக்கும்போது அது முழுமையாக மறைப்பதில்லை. அதனால் சந்திரனைச் சுற்றியுள்ள, சூரியனை மறைக்காத பகுதிகள் ஒளி வட்டமாக தெரியும். அப்போது சூரியன் நடுவில் கறுப்பாகவும், சுற்றிலும் நெருப்பு வளையமாகவும் காணப்படும். இதனைத்தான் வளைய சூரிய கிரகணம் என்கிறார்கள்.

  யாரெல்லாம் பார்க்கலாம்?:

  கனடா, வடக்கு ரஷ்யா மற்றும் கிரீன்லாந்து ஆகிய பகுதிகளில் இருப்பவர்கள் இந்தச் சூரிய கிரகணத்தை முழுமையாகப் பார்க்க முடியும். உலகின் பிற பகுதிகளில் உள்ள மக்கள் சூரியனின் மேற்பரப்பில் ஒரு இருண்ட நிழலை மட்டுமே காண்பார்கள். இது ஒரு பகுதி கிரகணம். அதனால் ‘நெருப்பு வளையத்தை’ பார்க்க இயலாது.

  கிழக்கு அமெரிக்கா, வடக்கு அலாஸ்கா, கனடா, கரீபியனின் சில பகுதிகள், ஐரோப்பா, ஆசியா மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் இந்தச் சூரிய கிரகணத்தைப் பகுதியாகப் பார்க்க முடியும் என நாசா இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.
  Published by:Yuvaraj V
  First published: