சிறிய மீன் குஞ்சுகளை விட்டு வைக்காத சுருக்குமடி வலையின் பின்னணி என்ன..?

சுருக்குமடி வலை மீதான தடையை நீக்க முடியாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சிறிய மீன் குஞ்சுகளை விட்டு வைக்காத சுருக்குமடி வலையின் பின்னணி என்ன..?
 ஆளுநரை கண்டித்து நடுக்கடலில் மீனவர்கள் போராட்டம்
  • Share this:
சுருக்குமடி, இரட்டைமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும்போது, சிறிய மீன் குஞ்சு கூட தப்ப முடியாத அளவிற்கு ஒரே நேரத்தில் மிகப்பெரிய மீன்கூட்டமே வலையில் சிக்கும் இதனால் மீன்வளம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு கடந்த 2007-ஆம் ஆண்டு தமிழக அரசு சுருக்குமடி வலை மீன்பிடிப்பிற்கு தடை விதித்தது. கடந்த 2018-ஆம் ஆண்டு வழக்கு ஒன்றில் சென்னை உயர் நீதிமன்றமும் இந்த தடையை உறுதி செய்தது. தடையை மீறி சுருக்குமடி வலையை பயன்படுத்தினால் தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.

சுருக்குமடி வலையை பயன்படுத்துவோருக்கு அதிக லாபமும், மற்றவர்களுக்கு சொற்ப லாபமும் கிடைக்கும் நிலை இருந்தது மீனவர் இனத்தை சாராத பெரு முதலாளிகளும், நவீன படகுகளை வாங்கி, மீனவ தொழிலாளர்களை கொண்டு சுருக்குமடி வலை மீன்பிடிப்பில் ஈடுபடுவதாக எதிர்ப்பாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


அரசு அதிகாரிகள் அவ்வப்போது நடவடிக்கை மேற்கொண்டுவந்தாலும், சுருக்குமடி வலை பயன்பாடு பல்லாண்டுகளாக தொடர்ந்து வருகிறது. சுருக்குமடி வலை பயன்படுத்தும் மீனவர்களும், மற்ற மீனவர்களும் மோதிக்கொள்ளும் நிகழ்வுகளும் தொடர்கதையாகின்றன.

இந்நிலையில், கடலூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் சுருக்குமடி வலை தடையை அதிகாரிகள் கடுமையாக்கியதால் போராட்டம் வெடித்துள்ளது. சுருக்குமடி வலை மீனவர்களும், அதற்கு எதிர்ப்பு தெரிக்கும் மீனவர்களும் என இருதரப்புமே தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுமென கோரிவருகின்றனர்.
First published: July 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading