சுர்ஜித் மீட்புப் பணியில் தொய்வு... சவாலாக இருக்கும் பாறைகள்... தற்போதைய நிலை?

சுர்ஜித் மீட்புப் பணியில் தொய்வு... சவாலாக இருக்கும் பாறைகள்... தற்போதைய நிலை?
  • News18
  • Last Updated: October 28, 2019, 10:31 AM IST
  • Share this:
அழ்துளை கிணறு அருகே புதிதாக தோண்டப்படும் இடத்தில் அதிக பாறைகள் இருப்பதால் சுர்ஜித் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி 4-வது நாளாக தொடர்கிறது. குழந்தையை மீட்க முதல் 2 நாட்களில் மீட்புப் பணியினர் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் பயனளிக்காததால் ரிக் என்று சொல்லக் கூடிய அதி நவீன இயந்திரங்களை கொண்டு வந்து குழந்தையை மீட்பதற்காக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுவன் இருக்கும் ஆழ்துளை கிணற்றுக்கு அருகே 1.2 மீட்டர் விட்டத்தில் 90 அடி ஆழத்திற்கு புதிய ஆழ்துளை கிணறு தோண்டப்படுகிறது. 85 அடி முதல் 88 அடிக்குள் குழந்தை சிக்கி உள்ளதால் 90 அடி ஆழத்திற்கு துளையிட திட்டம். எனினும் புதிதாக துளையிடப்படும் குழியில் 25 அடியில் இருந்து 90 அடி வரை பாறையாக உள்ளதால் துளையிடுவதில் காலதாமதம் ஏற்படுகிறது.


மீட்புப் பணியில் முதலில் பயன்படுத்தப்பட்ட இயந்திரம் பழுதானதாலும் பாறைகள் அதிகம் இருப்பதாலும் அதிக திறன் கொண்ட 2-வது இயந்திரம் ராமநாதபுரத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆழ்துளை கிணறு அருகே 2-வது ரிக் இயந்திரம் மூலம்புதிதாக துளையிடப்படும் இடத்தில் கடினமான பாறைகள் இருப்பதால் மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது . இயந்திரத்தில் பாறை உடைப்பு கருவியை பொருத்தி துளையிடும் பணி நடைபெற்று வருகிறது

புதிதாக தோண்டப்படும் துளை வழையாக குழந்தையை மீட்க தயார் நிலையில் 7 தீயணைப்பு வீரர்கள் உள்ளனர். 90 அடி தோண்ட திட்டமிட்டுள்ள நிலையில் தற்போது 35 அடி வரை தோண்டப்பட்டுள்ளது.

Loading...

குழந்தை சுர்ஜித்துக்கு ஆக்சிஜன் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகிறது. கிணறு அமைக்கும் இடத்தை சுற்றி பொதுமக்கள் உள்ளே வராதவாறு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

also watch

First published: October 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...