தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்றால் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும், கேசவ விநாயகமும் அண்ணாமலையின் வழியில் தலையிட வேண்டாம் என அண்ணாமலைக்கு திருச்சி சூர்யா சிவா எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
திருச்சி சூர்யாவிற்கும் பாஜகவின் சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவர் டெய்சி சரணுக்கும் இடையிலான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, திருச்சி சூர்யாவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 6 மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்தார். இதைதொடர்ந்து இன்று தனக்கும் பாஜகவிற்கும் உள்ள உறவை முடித்துக்கொள்வதாக திருச்சி சூர்யா அறிவித்தார்.
இதையும் படிக்க : இத்துடன் பாஜக உடனான உறவை முடித்துக்கொள்கிறேன்... திருச்சி சூர்யா பரபரப்பு
தற்போது, தனது ட்விட்டர் பக்கத்தில் திருச்சி சூர்யா அண்ணாமலைக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டிருக்கிறார். அந்த கடிதத்தில் அவர், “அண்ணாமலை அவ்ர்களே, நீங்கள் தமிழக பாஜக கட்சிக்கு கிடைத்த மிகமுக்கிய பரிசாவீர்கள். நீங்கள் நிச்சயம் 2026யில் தமிழக முதலமைச்சராவீர்கள். கடந்த சில மாதங்களாக உங்களுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் அடுத்த பிரதமர் வேட்பாளராக கூட தேர்வு செய்யப்படலாம். இந்திய அரசியலில் உங்களின் வளர்ச்சியை கண்டு மகிழ்ச்சியாக இருக்கிறது.
எல்.முருகன் மற்றும் கேசவ விநாயகம் அவர்களே., இனியாவது கட்சியில் உள்ளவர்களை நம்ப முயற்சியுங்கள். உங்களின் தலையீடு இல்லாமல் என் தலைவர்(அண்ணாமலை) பல அற்புதங்களை நிகழ்த்த கூடியவர். மக்களுடைய தலைவரை சுதந்திரமாக செயல்படவிடுங்கள். காயத்ரியை வைத்தும் டெய்சியை வைத்தும் உங்களுடைய விளையாட்டை இங்கு ஆடாதீர்கள். தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்றால் நீங்கள் இருவரும் அண்ணாமலையின் வழியில் வராதீர்கள். எப்பொழுதும் சகோதரர் அண்ணாமலையின் அன்புடன் - சூர்யா சிவா.” இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. திருச்சி சூர்யாவின் கடிதத்தால் பாஜக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Annamalai, BJP, L Murugan, Trichy Siva