ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

காயத்ரி, டெய்சியை வைத்து கேம் விளையாட வேண்டாம்.. அண்ணாமலையை சுதந்திரமாக செயல்பட விடுங்கள் - சூர்யா சிவா

காயத்ரி, டெய்சியை வைத்து கேம் விளையாட வேண்டாம்.. அண்ணாமலையை சுதந்திரமாக செயல்பட விடுங்கள் - சூர்யா சிவா

அண்ணாமலை - திருச்சி சூர்யா

அண்ணாமலை - திருச்சி சூர்யா

தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்றால் எல்.முருகன் மற்றும் கேசவ விநாயகமும் அண்ணாமலையின் வழியில் வரவேண்டாம் - சூர்யா சிவா

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அண்ணாமலை அடுத்த பிரதமர் வேட்பாளராக கூட தேர்வு செய்யப்படலாம் என பாஜகவிலிருந்து வெளிவந்த பிறகு சூர்யா சிவா குறிப்பிட்டுள்ளார்.

திருச்சி சூர்யாவிற்கும் பாஜகவின் சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவர் டெய்சி சரணுக்கும் இடையிலான ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, திருச்சி சூர்யாவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 6 மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்தார். இதைதொடர்ந்து இன்று தனக்கும் பாஜகவிற்கும் உள்ள உறவை முடித்துக்கொள்வதாக திருச்சி சூர்யா அறிவித்தார். மேலும் அண்ணாமலைக்கு தான் எழுதிய கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் திருச்சி சிவா பகிர்ந்துள்ளார்.

இதையும் படிக்க :  அம்பேத்கர் சிலைக்கு காவி உடை அணிவிக்க மாட்டேன் - நீதிமன்றத்தில் உத்தரவாதம் கொடுத்த அர்ஜூன் சம்பத்

அந்த கடிதத்தில் அவர், “அண்ணாமலை அவர்களே, நீங்கள் தமிழக பாஜக கட்சிக்கு கிடைத்த மிகமுக்கிய பரிசு. நீங்கள் நிச்சயம் 2026யில் தமிழக முதலமைச்சராக வருவீர்கள். கடந்த சில மாதங்களாக உங்களுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் அடுத்த பிரதமர் வேட்பாளராக கூட தேர்வு செய்யப்படலாம். இந்திய அரசியலில் உங்களின் வளர்ச்சியை கண்டு எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

மேலும், “எல்.முருகன் மற்றும் கேசவ விநாயகம் அவர்களே., இனியாவது கட்சியில் உள்ளவர்களை நம்ப முயற்சியுங்கள். உங்களின் தலையீடு இல்லாமல் என் தலைவர்(அண்ணாமலை) பல அற்புதங்களை நிகழ்த்த கூடியவர். மக்களுடைய தலைவரை சுதந்திரமாக செயல்படவிடுங்கள். காயத்ரியை வைத்தும் டெய்சியை வைத்தும் உங்களுடைய விளையாட்டை இங்கு ஆடாதீர்கள். தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்றால் நீங்கள் இருவரும் அண்ணாமலையின் வழியில் வராதீர்கள். எப்பொழுதும் சகோதரர் அண்ணாமலையின் அன்புடன் - சூர்யா சிவா.” இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

First published:

Tags: Annamalai, BJP, BJP cadre, Bjp state president, Trichy Siva