• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பழங்குடியினர் பாதுகாப்பு சங்கத்துக்கு ரூ.1 கோடி வழங்கிய சூர்யா: நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

பழங்குடியினர் பாதுகாப்பு சங்கத்துக்கு ரூ.1 கோடி வழங்கிய சூர்யா: நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

சூர்யா-மு.க.ஸ்டாலின்

சூர்யா-மு.க.ஸ்டாலின்

பழங்குடியினர் பாதுகாப்புச் சங்கத்துக்கு நடிகர் சூர்யா ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.

  • Share this:
    நடிகர் சூர்யா நடித்துள்ள 39-வது படம் ‘ஜெய் பீம்’. இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கி உள்ளார். நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் பிரகாஷ் ராஜ், கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். சூர்யா தனது 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ள இந்தப் படம், நாளை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    முன்னதாக படத்தின் சிறப்புக்காட்சி திரையிடப்பட்டது. சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் ஜெய் பீம் படத்தை பார்த்து படம் குறித்து இணையத்தில் வெகுவாக பாராட்டி வருகின்றனர். அதேபோல ஜெய்பீம் படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலினும் பார்த்துள்ளார். இந்தப் படம் குறித்த அவருடைய ட்விட்டர் பதிவில், ‘காவல் நிலையம் ஒன்றில் நடந்த இதே போன்ற தாக்குதல் தான், சென்னை மத்திய சிறையில் 1976-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் நாள் இரவு எனக்கும் நடந்தது. என் மீது விழுந்த பல அடிகளை தாங்கியவர் மரியாதைக்குரிய சிட்டிபாபு அவர்கள். அதனால் அவரது உயிரே பறிபோனது. அன்று நடந்த சித்திரவதைகளை ’சிறை டைரி’யாக சிட்டிபாபு அவர்கள் எழுதியுள்ளார்கள். இந்த நினைவுகள் அனைத்தும் நேற்று ஜெய்பீம் பார்த்து விட்டு வெளியில் வந்தபோது மனக்கண் முன் நிழலாடியது.

    இப்படி பல்வேறு தாக்கங்களை என்னுள் ஏற்படுத்த காரணமான ’ஜெய்பீம்’ படக் குழுவினருக்கு எனது பாராட்டுகள்! நண்பர் சூர்யாவுக்கு எனது வாழ்த்தும் நன்றியும்’ என்று குறிப்பிட்டுள்ளார். மு.க.ஸ்டாலினின் பாராட்டுக்கு சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். மேலும், பழங்குடியினர் பாதுகாப்புச் சங்கத்தின் மேம்பாட்டுக்கு 2டி தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஒரு கோடி ரூபாயை முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து சூர்யா வழங்கியுள்ளார்.


    இதுகுறித்த மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவில், ‘படம் எடுத்ததோடு நில்லாமல், பழங்குடியினர் பாதுகாப்புச் சங்கத்தின் மேம்பாட்டுக்கு ரூ.1 கோடி நிதியினை வழங்கிய நண்பர் சூர்யாவை எத்தனை பாராட்டினாலும் தகும். படக்குழுவினருக்குப் பாராட்டுகள்! வாழ்த்துகள். ஜெய்பீம் போன்ற படங்கள் இன்னும் ஏராளமாக வரவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: