• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கர்ப்பிணி வயிற்றில் முகமூடி துணியை வைத்துத் தைத்த மருத்துவர்கள்!

கர்ப்பிணி வயிற்றில் முகமூடி துணியை வைத்துத் தைத்த மருத்துவர்கள்!

கர்ப்பிணி வயிற்றில் முகமூடி துணி

கர்ப்பிணி வயிற்றில் முகமூடி துணி

பிரசவத்திற்கு அறுவைசிகிச்சை செய்யும் போது, பெண்ணின் வயிற்றில் Nose Mask எனப்படும் துணியை வைத்து தைத்ததால், பெண்ணின் உறவினர்கள், இரவு ஓசூர் அரசு மருத்துவமனை முன்பு உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

  • Last Updated :
  • Share this:
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு மருத்துவமனையில் அறுவைசிகிச்சையின் போது, கர்ப்பிணி வயிற்றில் மருத்துவர்கள் பயன்படுத்தும், முகமூடி துணி வைத்து தைத்ததைக் கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    ஓசூர் அரசனட்டி சூர்யா நகரைச் சேர்ந்த ராகவேந்திரா, கவிதா தம்பதிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கவிதாவிற்கு கடந்த ஜனவரி மாதம், ஓசூர் அரசு மருத்துவமனையில் அறுவைசிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது.

    சிகிச்சை முடிந்து வீட்டிற்கு அனுப்பப்பட்ட கவிதாவிற்கு, தொடர்ந்து வயிற்று வலி இருந்துள்ளது. இதனால், 82 கிலோ இருந்த கவிதா, தொடர்ச்சியாக எடை குறைந்து தற்போது 35 கிலோவாக குறைந்துள்ளார். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வலி குணமாகவில்லை. இதற்கிடையே இயற்கை உபாதையை கழிக்கும் போது, மருத்துவமனையில் முகத்திற்கு அணியும் துணி வெளியே வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த கவிதா, தன் உறவினரான செவிலியர் ஜோதி என்பவரிடம் கூறியுள்ளார்.

    அப்போது தான், பிரசவத்திற்கு அறுவைசிகிச்சை செய்யும் போது, Nose Mask எனப்படும் துணியை வைத்து தைத்திருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்தது. இதை அறிந்த கவிதாவின் உறவினர்கள், இரவு ஓசூர் அரசு மருத்துவமனை முன்பு உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கவிதாவை ஸ்கேன் செய்து, பிறகு மேல் சிகிசைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அழைத்துச் சென்றனர்.

    ஏழை எளிய மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கும் அரசு மருத்துவர்கள் கவனக்குறைவாக இருப்பதற்கு கண்டனம் தெரிவித்த அவர்கள், அறுவைசிகிச்சை செய்த டாக்டர் உட்பட அனைவரையும் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    மேலும் பார்க்க...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ilavarasan M
    First published: