ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

யார் பக்கம் தீர்ப்பு..? உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் அதிமுக பொதுக்குழு வழக்கு.!

யார் பக்கம் தீர்ப்பு..? உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் அதிமுக பொதுக்குழு வழக்கு.!

அதிமுக வழக்கு

அதிமுக வழக்கு

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று பிற்பகல் மீண்டும் விசாரிக்கிறது. இதனிடையே இந்த வாரத்திற்குள் வழக்கை முடிக்க விரும்புவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

சென்னை வானகரத்தில் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் சாய் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக விதிப்படி, ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்களின் கோரிக்கை அடிப்படையில் பொதுக்குழு நடத்தப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது.

இதன்பின்னர் இடைக்கால பொதுச்செயலாளர் என்பவர் தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்டாரா என்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு, பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களால் இடைக்கால பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட்டார் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள், தேர்தல் வைத்து தேர்ந்தெடுக்கப்பட்டதா? என்று நீதிபதி எழுப்பிய கேள்விக்கு, இரு பதவிகளுக்கும் வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பதால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக ஓபிஎஸ் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, ஜூலை 11ம் தேதிக்கு முன் அதிமுகவில் இருந்த நிலையை மீண்டும் தொடர உத்தரவிடுமாறு ஓபிஎஸ் தரப்பு கோரியது. அப்போது, எந்த விளக்கம் கேட்காமல் ஓபிஎஸை நீக்கியது ஏன்? என்று எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில், ஓபிஎஸ் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று குற்றச்சாட்டப்பட்டது. அப்போது யார் யாருக்கு ஆதரவுளிக்கிறார்கள் என்பதை நாங்கள் கருத்தில் கொள்ளவில்லை, கருத்தில் கொள்ளத் தேவையும் இல்லை என கூறிய நீதிமன்றம், பொதுக்குழு வழக்கு விசாரணையை இந்த வாரத்திற்குள் நிறைவு செய்ய விரும்புகிறோம் என கூறியது.

மேலும் ஏற்கனவே வைக்கப்பட்ட வாதங்களை மீண்டும் மீண்டும் எடுத்து வைக்கக்கூடாது என்றும் அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கு விசாரணையை இன்று பிற்பகல் 2 மணிக்கு ஒத்தி வைத்தனர். இரு தரப்பு வழக்கு விவரங்களை உரிய தேதிகளுடன், எழுத்துப்பூர்வமாக சுருக்கமாக தாக்கல் செய்ய நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

First published:

Tags: ADMK, Edappadi Palaniswami, O Pannerselvam, Supreme court