ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அதிமுக பொதுக்குழு வழக்கை தள்ளிவைக்க கோரி நீதிமன்றத்தை அவமதிக்காதீர் - ஓபிஎஸ் தரப்பிடம் உச்சநீதிமன்றம் காட்டம்..

அதிமுக பொதுக்குழு வழக்கை தள்ளிவைக்க கோரி நீதிமன்றத்தை அவமதிக்காதீர் - ஓபிஎஸ் தரப்பிடம் உச்சநீதிமன்றம் காட்டம்..

ஓபிஎஸ் - உச்சநீதிமன்றம்

ஓபிஎஸ் - உச்சநீதிமன்றம்

ஏற்கனவே டிசம்பர் 13ம் தேதிக்கு விசாரணையை எடுத்துக்கொள்ளுமாறு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம் டிசம்பர் 6ஆம் தேதி வழக்கு விசாரிக்கப்படும் என தெரிவித்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

அதிமுக பொதுக்குழு வழக்கை தள்ளிவைக்க கோரி நீதிமன்றத்தை அவமதிக்காதீர் என ஓபிஎஸ் தரப்பிடம் நீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது.

அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தார். கடந்த நவம்பர் 21ம் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்த போது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஒரு வாரம் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து வழக்கு டிசம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படிக்க :  இத்துடன் பாஜக உடனான உறவை முடித்துக்கொள்கிறேன்... திருச்சி சூர்யா பரபரப்பு

இந்நிலையில் டிசம்பர் 13ம் தேதிக்கு விசாரணையை எடுத்துக்கொள்ளுமாறு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம் டிசம்பர் 6ஆம் தேதி வழக்கு விசாரிக்கப்படும் என தெரிவித்தது. அதன்படி இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மூத்த வழக்கறிஞர் ஆஜராகததால் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கை விடுத்தது.

இதை கேட்ட நீதிபதிகள், வழக்கை ஒத்திவைக்க கேட்டு நீதிமன்றத்தை அவமதிக்காதீர்கள் என காட்டமாக அறிவுறுத்தி, வழக்கு விசாரணையை வருகிற 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

First published:

Tags: ADMK, O Pannerselvam, OPS - EPS, Supreme court