ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!!

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!!

இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்.

இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்.

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதித்து அடுத்தகட்ட விசாரணை நவம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது.

  அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக, ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன், பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தார். எடப்பாடி பழனிசாமி, தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, சுந்தரமோகன் அமர்வு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்று தீர்ப்பு அளித்து, தனி நீதிபதி ஜெயச்சந்திரனின் உத்தரவை ரத்து செய்தது.

  அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பில் ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உத்தரவிடப்பட்ட நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தார்.

  Also Read: தேவர் குருபூஜை - தங்க கவசத்தை பெறப்போவது யார் ? ஓபிஎஸ் -ஈபிஎஸ் இடையே போட்டி

  அந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் ஏழாவது அமர்வில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ணா முராரி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த இடைக்கால தடை விதித்தனர். மேலும் அதிமுகவில் இருவரும் தலைவராக தொடர முடியாது என  உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் விசாரணை முடியும் வரை  அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதித்து அடுத்தகட்ட விசாரணை நவம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: ADMK, EPS, OPS, Supreme court