Home /News /tamil-nadu /

எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக அலுவலக சாவி வழங்கியது செல்லும் - உச்சநீதிமன்றம்

எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக அலுவலக சாவி வழங்கியது செல்லும் - உச்சநீதிமன்றம்

ஓபிஎஸ் - இபிஎஸ்

ஓபிஎஸ் - இபிஎஸ்

கட்சிப் பணத்தை கையாடல் செய்த அவரிடம் சாவியை ஒப்படைக்க கூடாது என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India
    எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக அலுவலக சாவியை வழங்கிய உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், இபிஎஸ்-க்கு அதிமுக அலுவக சாவியை ஒப்படைக்க வேண்டும் என்ற தீர்ப்பு செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

    அதிமுக அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. சென்னையில் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

    இதற்கிடையே அன்றைய தினம் அதிமுக தலைமை அலுவலகத்தில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே வன்முறை வெடித்ததால், அலுவலகம் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. பின்னர் இருவரும் உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி வசம் அலுவலகத்தின் சாவி ஒப்படைக்கப்பட்டது.

    இதையும் வாசிக்க: திமுக என்றாலே கமிஷன், கலக்சன், கரப்ஷன் தான்..எடப்பாடி பழனிசாமி பேச்சு!

    இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார். இதில் இபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த பதில் மனுவில் பன்னீர்செல்வம் அடிப்படை உறுப்பினராக இல்லாத போது அவர் அலுவலகத்துக்கு உரிமை கோர முடியாது என்றும், கட்சிப் பணத்தை கையாடல் செய்த அவரிடம் சாவியை ஒப்படைக்க கூடாது என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

    இந்த வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்றம், எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு செல்லும் என உத்தரவிட்டது.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: ADMK, Chennai High court, OPS, OPS - EPS, Supreme court

    அடுத்த செய்தி