• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை!

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை!

ஸ்டெர்லைட் ஆலை

ஸ்டெர்லைட் ஆலை

Sterlite Issue: வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தை அனுகி அனுமதி பெற்றுக்கொள்ள நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், அனுமதி அளிக்க மறுத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் அறிக்கையின் அடிப்படையில், ஸ்டெர்லைட் ஆலையை நிபந்தனைகளுடன் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்தது.

இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதேநேரம், ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிடக்கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் சமூக ஆர்வலர் பாத்திமா பாபு ஆகியோரும் மனுத் தாக்கல் செய்தனர்.

Sterlite | ஸ்டெர்லைட் ஆலை (கோப்புப் படம்)
ஸ்டெர்லைட் ஆலை (கோப்புப் படம்)


விசாரணையின் போது தருண் அகர்வால் குழு அறிக்கை யூகங்களின் அடிப்படையிலானது என்றும் உண்மை நிலவரத்தை அறிக்கையாக சமர்பிக்கவில்லை என்றும் தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.

எனவே தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை நிராகரிக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரியது. இதனிடையே போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு முயற்சிப்பதாக வேதாந்தா நிறுவனம் தனது வாதத்தின் போது குற்றம்சாட்டியது.

அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த 7-ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் மனுதாரர்கள் அனைவரும் தங்கள் தரப்பு வாதங்களை எழுத்துப்பூர்வமாக கடந்த 11-ம் தேதி தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்குகளின் மீது நீதிபதி ரோஹிந்தன் ஃபாலி நாரிமன் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பளித்தது.

தீர்ப்பில், ஆலையை திறக்க அனுமதி அளிக்க நீதிபதிகள் மறுத்துள்ளனர். வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தை அனுகி அனுமதி பெற்றுக்கொள்ள நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

மேலும், ஆலையை திறக்கக்கோரி தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

Also See...ஸ்டெர்லைட் வழக்கின் பின்னணி...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: