ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட மின் கட்டண உயர்வுக்கு தடை இல்லை - உச்ச நீதிமன்றம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடிவெடுக்க தடை கோரி, தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கங்கள் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இதை விசாரித்த தனி நீதிபதி, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினர் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்பதால்,  அவர் நியமிக்கப்படும் வரை கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத்தின் மனு மீது ஆணையம் இறுதி முடிவு எடுக்கக் கூடாது என உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து ஒழுங்குமுறை ஆணையம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்பாலைகள் சங்கத்தினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மனு நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கவுல், அபய் ஓஜா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. 2018ம் ஆண்டு இதேபோன்ற வழக்கு விசாரணைக்கு வந்துள்ளதாகவும், மின் கட்டண உயர்வுக்கு தடை விதிக்க முடியாது என்றும் உத்தரவிட்டனர்.  மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை அதிகாரிகளை நியமிக்கவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர்.

First published:

Tags: EB Bill, Electricity