Home /News /tamil-nadu /

அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை... ஈபிஎஸ் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு தடை.. உச்ச நீதிமன்ற உத்தரவால் ஓபிஎஸ்க்கு பின்னடைவு

அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை... ஈபிஎஸ் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு தடை.. உச்ச நீதிமன்ற உத்தரவால் ஓபிஎஸ்க்கு பின்னடைவு

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை

ADMK general body meeting : ஜூலை 11 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை இல்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, வரும் 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்த தடையில்லை என உச்ச  நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    அதிமுகவில் அதிகாரப் போட்டி உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் 11 ஆம் தேதி அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு கோரி டிஜிபி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் மனு அளித்தனர்.

    கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இபிஎஸ் கூடுதல் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டு கட்சி செயல்பாடுகளை முடக்க ஓபிஎஸ் முயற்சி செய்வதாக குற்றம்சாட்டி இருந்தார்.

    இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இந்த மனு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு இதனை விசாரித்து. அப்போது , அப்போது, உட்கட்சி விவகாரங்களில் சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டது சட்டத்திற்கு விரோதமானது என இபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது. உட்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தீர்வு காண முடியும் என்று ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, கட்சி விவகாரங்களில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என கூறிய நீதிபதிகள்,  நட்பு ரீதியில் தீர்வு காண வேண்டும் என்று ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்புக்கு அறிவுறுத்தினர்.  ஜூன் 23ம் தேதி அதிமுக பொதுக்குழு தொடர்பான நீதிமன்ற உத்தரவு மற்றும் அவமதிப்பு வழக்கிற்கும் இடைக்கால தடை விதித்த நீதிபதிகள்,
    ஏதேனும் நிவாரணம் தேவைப்பட்டால், ஓ.பன்னீர்செல்வம் உயர்நீதிமன்ற தனி நீதிபதியை நாடலம் என்றனர்.
    அதிமுக பொதுக்குழு தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க போவதில்லை என தெரிவித்த நீதிபதிகள், வழக்கை ஒத்திவைத்தனர்.

    Must Read : சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு.. 1050 ரூபாயை கடந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி

    இதற்கிடையில், சென்னையை அடுத்த வானகரத்தில் பொதுக் குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 36 ஆயிரம் சதுரஅடியில் ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பேர் அமர்ந்து பொதுக்குழு கூட்டத்தை காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published:

    Tags: ADMK, Edappadi Palaniswami, EPS, OPS, Supreme court

    அடுத்த செய்தி