ராஜேந்திர பாலாஜி வழக்கில் மேற்கொண்ட நடைமுறைகள் குறித்து தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது.
ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கர்நாடக மாநிலம் ஹசன் பகுதியில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜி விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது. இதனையடுத்து மதுரை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் நிர்வாக காரணங்களுக்காக திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுமீதான விசாரணை இன்று நடந்தது. ராஜேந்திர பாலாஜி 4 வாரம் நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் தமிழக அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பியது.
ராஜேந்திர பாலாஜி தரப்பு, “முன்ஜாமீன் மறுத்த உயர்நீதிமன்ற உத்தரவு அரசியல் சாசனத்தை எதிரானது. உச்சநீதிமன்ற முன்னாள் உத்தரவுகள் எதிரானது. போலீசாரின் கட்டாயத்தால் விஜய் தம்பி புகார் அளித்துள்ளார். ஒருவரை காவல்துறை எவ்வளவு கட்டாயப் படுத்தும் என்பது அனைவருக்கும் தெரியும். அனுமானத்தின் அடிப்படையில் கைது செய்யக் கூடாது என உச்ச்நீதிமன்ற உத்தரவு உள்ளது. தனக்கு ஆஜராகக் ஒரு சம்மன் கூட வழங்கப்படவில்லை தான் ஆஜராக தயாராக இருந்தும் சம்மன் வழங்காமல் எப்பபடி ஆஜராக முடியும்.
நீதிமன்ற விதிகளை பின்பற்றாமல் தன்னை கைது செய்ததற்காக தமிழக அரசு கண்டிக்கப் பட வேண்டும் கைது செய்து தன்னை திருச்சி சிறையில் அடைத்துள்ளனர். 300 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள சிறையில் அடைக்க காரணம் என்ன. விருதுநகரில் பதியப்பட்ட புகாருக்கு திருச்சி சிறையில் ஏன் அடைக்க வேண்டும் தமிழக அரசு திட்டமிட்டு அனைத்தையும் செய்து வருகிறது. என வாதங்களை முன்வைத்தாது.
இதனைத்தொடர்ந்து, ராஜேந்திர பாலாஜியை வேறு சிறைக்கு கொண்டு செல்லப் பட வேண்டிய அவசியம் என்ன அவரை மதுரையில் ஏன் அடைக்கப்படவில்லை. காவல்துறையின் அனைத்து நடவடிக்கைகளும் கேள்வியை ஏற்படுத்துகின்றன. தமிழக அரசின் சிறைகள் நிரம்பி வழிகிறதா? அவ்வளவு கைதிகள் உள்ளனரா.கைதிகளை விடுவிக்க கூறி உச்சநீதிமன்ற உத்தரவு இருந்தும் என் தமிழக அரசு அந்த நடைமுறையை பின்பற்ற வில்லை என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. ராஜேந்திர பாலாஜி புகார் பதியப்பட்ட காவல் நிலைய பகுதியை விட்டு வெளியூர் செல்லக் கூடாது. அவரது பாஸ்போர்டை சமர்பிக்க உத்தரவிட்ட நீதிமன்றம். அவருக்கு 4 வாரம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.