ஸ்டெர்லைட் ஆலையில் மாநில அரசே ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க வேண்டியது தானே? உச்ச நீதிமன்றம் கேள்வி

உச்ச நீதிமன்றம்

ஸ்டெர்லைட் ஆலையில் மாநில அரசே ஆக்சிஜன் உற்பத்தியை ஏன் தொடங்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

 • Share this:
  தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரித்து வழங்க அனுமதிக்கும்படி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் இடைக்கால மனு தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றத்தில் அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது ஸ்டெர்லைட் ஆலையை திறந்து அங்கு ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.

  இது தொடர்பாக, பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று தமிழக அரசு தரப்பு தெரிவித்த நிலையில் இந்த இடைக்கால மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் நடைபெற்றதது.

  அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கிறிஞர் வைத்தியநாதன், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்றார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற  கலவரம் போன்று மீண்டும் நடைபெற அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக அரசு எழுத்துப்பூர்வாமக தெரிவித்திருந்தது.

  தமிழக அரசு வழக்கிறிஞரின் வாதத்தை ஏற்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக மறுப்பு தெரிவித்தனர். மக்கள் உயிர் ஆபத்தில் இருக்கும் போது ஆலையை திறக்க முடியாது என்பது ஏற்க கூடியதல்ல. ஏற்கனவே ஸ்டெர்லைட் ஆலை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் ஏன் மாநில அரசே, ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க கூடாது என்றும் கேள்வி எழுப்பினர்.

  இதை தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்து உரிய பதிலை அளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டு வழக்கு விசாரணை திங்கட் கிழமை ஒத்திவைத்தனர்.
  Published by:Vijay R
  First published: