சரவணபவன் ராஜகோபாலன் உடனே சரணடைய உச்ச நீதிமன்றம் உத்தரவு

மற்ற குற்றவாளிகள் 9 பேரும் சென்னையில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

சரவணபவன் ராஜகோபாலன் உடனே சரணடைய உச்ச நீதிமன்றம் உத்தரவு
ராஜகோபால்
  • News18
  • Last Updated: July 9, 2019, 11:03 AM IST
  • Share this:
சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலன் சரணடைவதில் விலக்கு இல்லை என்றும், உடனே சரணடைய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ராஜகோபால் உள்ளிட்ட 11 குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட ஆயுள்தண்டனையை கடந்த மார்ச் மாதம் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

அவர்கள் சரணடைய ஜூலை 7 வரை அவகாசம் வழங்கப்பட்டது.  இந்நிலையில், ராஜகோபால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் சரணடைய கால அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் ராஜகோபால் மற்றும் அவரது உதவியாளர் ஜனார்த்தனன் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.


அந்த மனு மீதான விசாரணையின் போது, அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை. இதனால் விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலன் சரணடைவதில் விலக்கு இல்லை என்று நீதிபதி உத்தரவிட்டனர். மேலும் ராஜகோபால் உடனே சரணடைய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.

Also see...
First published: July 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்