Home /News /tamil-nadu /

“சமரசம்..!” இறங்கி வந்த ஓபிஎஸ்.. விடாப்பிடியாக இருக்கும் ஈபிஎஸ்.. 3 வாரத்தில் வழக்கை முடிக்க நீதிமன்றம் உத்தரவு

“சமரசம்..!” இறங்கி வந்த ஓபிஎஸ்.. விடாப்பிடியாக இருக்கும் ஈபிஎஸ்.. 3 வாரத்தில் வழக்கை முடிக்க நீதிமன்றம் உத்தரவு

அதிமுக வழக்கு

அதிமுக வழக்கு

AIADMK CASE : உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவெடுக்கும். இந்த விவகாரத்தில் நாங்கள் மேலும் தலையிட விரும்பவில்லை என தலைமை நீதிபதி ரமணா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பொதுக்குழுவை நடத்தலாம். விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம் என தீர்ப்பு வழங்கியது. கடந்த 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு நடந்தது. எடப்பாடி பழனிசாமி, இடைக்கால பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை தொடர்ந்து, பொதுக்குழு முடிவுகளுக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரியும், தானும் தனது மகனும் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினராக ரவீந்திர நாத்தும் விதிகளை மீறி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது செல்லாது எனவும். தானும் தனது ஆதரவாளரகளும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கில் தங்களது தரப்பை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என கோரிக்கை வைத்து என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சார்பிலும், அதிமுக கட்சியின் சார்பிலும் கடந்த 18 ஆம் தேதி கேவியத் மனுக்க்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த போது, ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ண குமார், ரஞ்சித் குமார் மற்றும் ஈபிஎஸ் தரப்பில் ராகேஷ் திவேதி, சி.எஸ். வைத்தியநாதன் ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.

Also Read:  தமிழனாக பெருமைப்பட்டேன்.. முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டுகள் - பாஜக தலைவர் அண்ணாமலை

அப்போது ஓபிஎஸ் தரப்பு, "நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உள்ளது பொதுக்குழு முடிவுகள் உள்ளது. நடைபெற பொதுக்குழுவை சட்ட விரோதமானது. ஒருங்கிணைப்பாளர் அனுமதி இல்லாமல் நடைபெற்றுள்ளது. விதிமுறைகளை மீறி கட்சியிலிருந்து என்னை நீக்கியுள்ளனர். எனவே பொதுக்குழு முடிவுகளுக்கு தடை விதிக்க வேண்டும்" என கோரிக்கை. குறுக்கிட்ட தலைமை நீதிபதி ரமணா, "இந்த விவகாரத்தில் இரண்டு தரப்பும் இணையுமா? சமரசம் செய்து கொள்ள வாய்ப்புள்ளதா?" எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு ஓபிஎஸ் தரப்பு சமரசத்திற்கு தயாராக உள்ளோம். முதலில் எங்கள் கோரிக்கையை ஏற்க வேண்டும் என கூறியது. ஆனால் சமரசம் ஒருகாலத்திலும் ஏற்படாது என என ஈபிஎஸ் தரப்பு திட்டவட்டமாக தெரிவித்தது. அதைத் தொடர்ந்து வாதிட்ட ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள்," கட்சி விதிகளை மீறி செயல்பட்டதால் தான் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீதி நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து கட்சி விதிமுறைகளை மீறும் வகையிலும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வருகின்றனர்." என குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

அதிமுக கட்சியின் பொதுக்குழு விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை. இது போன்ற வழக்குகளை உச்சீதிமன்றத்தில் நிலுவையில் வைக்கவும் வேண்டியதில்லை. எனவே உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவெடுக்கும். இந்த விவகாரத்தில் நாங்கள் மேலும் தலையிட விரும்பவில்லை என தலைமை நீதிபதி ரமணா திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையடுத்து, உயர்நீதி மன்றம் விசாரித்து முடிக்கும் வரை ஜூலை 11 ஆம் தேதிக்கு முன்னர் என்ன நிலை இருந்ததோ அதே நீடிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை வைத்தது. ஆனால் ஈபிஎஸ் தரப்பு தற்போதைய நிலையே தொடர வேண்டும் என கோரிக்கை வைத்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "அதிமுக பொதுக்குழு தொடர்பான அனைத்து வழக்குகளையும் மூன்று வார காலத்திற்குள் உச்சநீதிமன்றம் முடிவு செய்யும் எனவும், அதுவரை தற்போதைய நிலையே தொடரும் எனவும்",உத்தரவிட்டு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு திருப்பி அனுப்பினர்.
Published by:Ramprasath H
First published:

Tags: ADMK, OPS - EPS, Supreme court

அடுத்த செய்தி