Home /News /tamil-nadu /

தஞ்சை மாணவி வழக்கு: பாஜக நியாயத்தின் பக்கம் இருப்பதை உறுதி செய்த உச்சநீதிமன்ற தீர்ப்பு - அண்ணாமலை

தஞ்சை மாணவி வழக்கு: பாஜக நியாயத்தின் பக்கம் இருப்பதை உறுதி செய்த உச்சநீதிமன்ற தீர்ப்பு - அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலை

கட்டாய மதமாற்றத்திற்கு ஒரு இளம்பெண்ணை பலி வாங்கிய கட்டாய மதமாற்றத்தைக்‌ கண்டிக்காமல்‌, அப்பள்ளியை காப்பாற்றுவதில்‌ ஆளும்கட்சி முனைப்பாக இருந்தது வெட்ட வெளிச்சமாக தெரிந்தது.

    தஞ்சை மாணவி மரணத்தை சிபிஐ விசாரிக்கும்‌ என்ற உச்சநீதிமன்றம்‌ உத்தரவு, நீதிக்கும்‌, பாஜகவின்‌ அறப்போராட்டத்திற்கும்‌ கிடைத்த வெற்றி என அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரியலூர்‌ மாவட்டத்தைச்‌ சேர்ந்த மாணவி லாவண்யா, தஞ்சை மாவட்டம்‌ மைக்கேல்‌ பட்டியில்‌ உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில்‌ தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில்‌, பாரதிய ஜனதா கட்சி மேற்கொண்ட தொடர்‌ போரட்டத்தின்‌ காரணமாக, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி, மதுரை ஐகோர்ட்‌ வெளியிட்ட தீர்ப்பை உச்சநீதிமன்றம்‌ உறுதிசெய்துள்ளது. தமிழக அரசுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கும்‌ இந்தத்‌ தீர்ப்பு, நீதிக்குக்‌ கிடைத்த வெற்றி. இது பாஜகவின்‌ தொடர்‌ அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.

    கட்டாய மதமாற்றம்‌ செய்வதற்காக கொடுக்கப்பட்ட மன அழுத்தத்தின்‌ காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில்‌, தமிழக அரசு அதிகாரிகளோ, தமிழக அரசின்‌ அமைச்சர்களோ, அல்லது முதலமைச்சரோ, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நேரில்‌ சென்றோ, அல்லது ஆறுதல்‌ உதவிகளையோ இதுவரை கொடுக்கவில்லை.

    இதையும் படிங்க - Exclusive : தஞ்சை மாணவியின் தற்கொலைக்கான காரணம் என்ன? - உண்மை அறியும் குழு விளக்கம்

    இன்னமும்‌ சொல்லப்போனால்‌, விசாரிக்கும்‌ முன்பே காவல்துறையினர்‌ மற்றும்‌ மாநில அரசின்‌ அமைச்சர்கள்‌ என பேசிய அனைவரும்‌, இவ்வழக்கில்‌ கட்டாய மதமாற்றத்திற்கான எந்த முகாந்திரமும்‌ இல்லை என்ற முடிவுக்கு வந்து ஊடகத்தின்‌ வாயிலாக வெளிப்படுத்தினர்‌. இந்த வழக்கு பற்றி எந்தக்‌ கருத்தையும்‌ தெரிவிக்காமல்‌ முதலமைச்சர்‌ மெளனம்‌ காப்பதாலும்‌, ஆளும்‌ கட்சியின்‌ எண்ணம்‌ தெளிவாக தெரிந்தது. கட்டாய மதமாற்றத்திற்கு ஒரு இளம்பெண்ணை பலி வாங்கிய கட்டாய மதமாற்றத்தைக்‌ கண்டிக்காமல்‌, அப்பள்ளியை காப்பாற்றுவதில்‌ ஆளும்கட்சி முனைப்பாக இருந்தது வெட்ட வெளிச்சமாக தெரிந்தது.

    தஞ்சை மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை, தமிழக அரசு கவுரவ பிரச்னையாக கருதக்கூடாது: உச்சநீதிமன்றம்

    மேலும்‌, குற்றம்‌ சாட்டப்பட்ட பள்ளி நிர்வாகி சகாய மேரி சமீபத்தில்‌ சிறையிலிருந்து ஜாமினில்‌ வெளிவந்தபோது, ஆளும்‌ கட்சியின்‌ திமுக எம்‌.எல்‌.ஏ நேரில்‌ சென்று, மரியாதைகள்‌ செய்து, குற்றம்‌ சாட்டப்பட்டவரை வரவேற்கிறார்‌. முதல்வர்‌ அனுமதி இல்லாமல்‌ இது சாத்தியமா? மதுரை உயர்‌ நீதிமன்றம்‌ சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட போது, அதை ஏற்காமல்‌, ஆளும்‌ கட்சி அவசர அவசரமாக சுப்ரீம் கோர்ட்டில்‌, மதுரை உயர்‌நீதிமன்றத்தின்‌ உத்தரவுக்கு தடை கோரி வழக்கு தொடர்ந்தது. மேற்கண்ட சம்பவங்களிலிருந்து ஆளும்கட்சியின்‌ எண்ணத்தை நாம்‌ புரிந்து கொள்ள முடியும்‌. இனியாவது அறிவாலயம்‌ அரசு தான்‌ சொன்ன பொய்களுக்காக மக்களிடம்‌ மன்னிப்பு கேட்குமா?

    மகளை இழந்து தவிக்கும்‌ பெற்றோரை இதுவரை சந்திக்காத மாவட்ட ஆட்சித்தலைவர்‌ இனியாவது செல்வாரா? இனியாவது உயிரிழந்த மாணவியின்‌ பெற்றோரை முதல்வர்‌ நேரில்‌ சந்தித்து ஆறுதல்‌ கூறுவாரா? உச்சநீதிமன்றத்தின்‌ இந்த சிறப்பான தீர்ப்பின்‌ மூலம்‌ பல உண்மைகள்‌ தெளிவாகிறது. ஆளும்‌ அரசும்‌ அதிகாரிகளும்‌ அடுக்கடுக்காக சொன்ன பொய்களை
    இந்த தீர்ப்பு வெளிச்சப்‌ படுத்துகிறது. பாரதிய ஜனதா கட்சி உண்மையின்‌ பக்கம்‌, நேர்மையின்‌ பக்கம்‌, மக்களின்‌ பக்கம்‌, நியாயத்தின்‌ பக்கம்‌ இருப்பதை இந்த தீர்ப்பு உறுதி செய்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Annamalai, BJP, DMK

    அடுத்த செய்தி