ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டும்- உச்ச நீதிமன்றம்

செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டும்- உச்ச நீதிமன்றம்

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

குற்றம்சாட்டப்பட்டவர் அதிகாரத்தில் இருப்பதால் சாட்சியங்களில் தலையிட வாய்ப்புள்ளது எனவும் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  போக்குவரத்துத்துறை பணி நியமன வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  பணம் பெற்றுக் கொண்டு போக்குவரத்துத்துறையில் பணி நியமனம் வழங்கிய குற்றச்சாட்டு குறித்து, அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்பு சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

  அப்போது, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, வழக்கு விசாரணையை மீண்டும் நடத்தினால், அதை முடிக்க 4 முதல் 5 ஆண்டுகள் ஆகும் எனவும், குற்றம்சாட்டப்பட்டவர் அதிகாரத்தில் இருப்பதால் சாட்சியங்களில் தலையிட வாய்ப்புள்ளது எனவும் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.

  இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு வழக்கு: பாரம்பரிய விளையாட்டை ஒழிக்கவே பீட்டா மனு- தமிழக அரசு 

  இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் பெயர் இல்லாததால், மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என, எதிர்தரப்பில் வாதிடப்பட்டது.

  இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

  மேலும், தமிழ்நாடு அரசு மற்றும் செந்தில் பாலாஜி தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை அடுத்த ஆண்டு ஜனவரி 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Senthil Balaji, Supreme court