"சட்டத்தோடு விளையாடாதீர்கள்.." கார்த்தி சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

கார்த்தி சிதம்பரம் (கோப்புப்படம்)

மேலும், 10 கோடி ரூபாயை உச்ச நீதிமன்ற பதிவாளரிடம் பிணையத் தொகையாக செலுத்தி விட்டு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் வருகிற மார்ச் 5,6,7 மற்றும் 12-ம் தேதிகளில் ஆஜாராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.

இதையடுத்து இந்த முறைகேடுகளில் கார்த்தி சிதம்பரத்துக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. சிபிஐ, அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இடையில் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி கேட்பதும் அதற்கு சிபிஐ, அமலாக்கத்துறையினர் தடை விதிப்பதாகவும் தொடர்ந்தது. இந்நிலையில் நேற்று உச்ச நீதிமன்றத்தால் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

கூடுதலாக உச்ச நீதிமன்றம் கார்த்தி சிதம்பரத்தை மார்ச் மாதம் 5,6,7 மற்றும் 12-ம் தேதிகளில் விசாரணைக்கு வரும்மாறு உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவில், “ஐஎன் எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் இம்முறை சரியான நேரத்துக்கு ஆஜராக வேண்டும். முன்புபோல் இல்லாமல் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். இல்லையெனில் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். சட்டத்தோடு விளையாட நினைத்தால் இனி கடவுளால் மட்டுமே கார்த்தி சிதம்பரத்துக்கு உதவ முடியும்” என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும், 10 கோடி ரூபாயை உச்ச நீதிமன்ற பதிவாளரிடம் பிணையத் தொகையாக செலுத்தி விட்டு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் பார்க்க: பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளை: லாக்கர்களில் இருந்த பொருட்களை எடுத்துச் சென்ற வாடிக்கையாளர்கள்
Published by:Rahini M
First published: