பொதுப்பிரிவு இடஒதுக்கீடு ஒரு பிரிவினருக்கு மட்டும் சொந்தமல்ல.. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ராமதாஸ் வரவேற்பு

பொதுப்பிரிவு இடஒதுக்கீடு ஒரு பிரிவினருக்கு மட்டும் சொந்தமல்ல.. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ராமதாஸ் வரவேற்பு

பாமக நிறுவனர் ராமதாஸ்

பொதுப்போட்டி பிரிவு, தகுதியுள்ள அனைவருக்குமானது என்பதை உச்சநீதிமன்றம் ஏற்கனவே பலமுறை உறுதி செய்திருந்தும் அதனை தமிழக அரசு பின்பற்றவில்லை என ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

 • Share this:
  பொதுப்பிரிவு இடஒதுக்கீடு ஒரு பிரிவினருக்கு மட்டும் சொந்தமல்ல என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தேசிய அளவிலும், மாநில அளவிலும் கடைபிடிக்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டு முறையில் பொதுப் போட்டிக்கான ஒதுக்கீடு (Open Competition) அனைத்து சமுதாயங்களுக்குமானது தானே தவிர, ஒரு பிரிவுக்கு மட்டும் சொந்தமானது அல்ல என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது குறிப்பிட்டார்.

  மேலும், பொதுப்பிரிவு இட ஒதுக்கீடு குறித்து தமிழக அரசு நிறுவனங்கள் முரண்பட்ட நிலையை எடுத்துள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இத்தீர்ப்பை பாமக வரவேற்கிறது என்று கூறினார்.

  Also read: ’விவசாயிகள் பிரச்னைகளை அரசுகள் காது கொடுத்து கேட்பதில்லை’ - திமுக எம்எல்ஏ கீதாஜீவன் குற்றச்சாட்டு

  பொதுப்போட்டி பிரிவு, தகுதியுள்ள அனைவருக்குமானது என்பதை உச்சநீதிமன்றம் ஏற்கனவே பலமுறை உறுதி செய்திருந்தும் அதனை தமிழக அரசு பின்பற்றவில்லை என ராமதாஸ் குற்றம்சாட்டினார். எனவே இந்த தீர்ப்பைக் கருத்தில் கொண்டு பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வில் வெற்றி பெற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் 82 பேருக்கு ஆசிரியர் பணி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Rizwan
  First published: