Home /News /tamil-nadu /

ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரம் நிபந்தனை ஜாமீன்..

ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரம் நிபந்தனை ஜாமீன்..

ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜியை கைது செய்த விதம் குறித்து தமிழக அரசிடம் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தமிழக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கடந்த 17 ஆம் தேதி முதல் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை 8 தனிப்படை தேடி வந்தது. கேரளா, பெங்களூரு, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை முகாமிட்டு தேடும் பணியில் ஈடுபட்டு வந்தது.

    இந்நிலையில் அவருடன் தொடர்பில் இருந்து உதவி செய்ததாக திருப்பத்தூரை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இந்நிலையில்  தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கர்நாடக மாநிலம் ஹசன் பகுதியில்  தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட ராஜேந்திரபாலாஜி விருதுநகர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது. இதன்படி வரும்20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முதலில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் நிர்வாகக் காரணங்களுக்காக திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

    இந்நிலையில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. அப்போது, ராஜேந்திர பாலாஜியை கைது செய்த விதம் குறித்து கேள்வி எழுப்பிய நீதிமன்றம், ராஜேந்திர பாலாஜி தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டு அவருக்கு 4 வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Rajendra balaji, Supreme court, Tamilnadu

    அடுத்த செய்தி