மலேசிய மணல் விவகாரம்: தமிழக அரசுக்கு ரூ.11 கோடி தண்டம் விதித்த நீதிமன்றம்

news18
Updated: September 12, 2018, 10:02 PM IST
மலேசிய மணல் விவகாரம்: தமிழக அரசுக்கு ரூ.11 கோடி தண்டம் விதித்த நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
news18
Updated: September 12, 2018, 10:02 PM IST
தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள மலேசிய மணலுக்கான தொகை 11 கோடி ரூபாயை, ஒரு வார காலத்திற்குள் நீதிமன்றத்தில் வழங்க வேண்டுமென, தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெளிநாட்டு மணலை தனியார் விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குவாரிகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால், மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, தூத்துக்குடி துறைமுகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள 55 ஆயிரம் டன் மணலை விற்பனை செய்ய அனுமதிக்ககோரி, புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமையா நிறுவனம், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில், ராமையா நிறுவனம் மணலை விற்பனை செய்து கொள்ள, உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கானது நீதிபதி மதன்.பி.லோகூர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இறக்குமதி செய்யப்பட்டுள்ள மணலை தமிழக அரசு, டன் ஒன்றுக்கு 2,50,000 வீதம், அனைத்து மணலையும் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும், மேலும் ஆறு வாரத்திற்குள், அனைத்து மணலையும் விற்பனை செய்து நிறுவனத்திடம் மொத்த தொகையை வழங்கிட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மணலை இறக்குமதி செய்த ராமையா நிறுவனத்திற்கும், அதற்கு பணம் வழங்கிய மரியா எண்டர்பிரைஸ் நிறுவனத்திற்கும் இடையே பிரச்னை நிலவுவதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. வாதங்களை கேட்டறிந்த நீதிமன்றம், மணலுக்கான பணத்தினை நீதிமன்றத்திலேயே தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, வழக்கை வரும் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
First published: September 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்