ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மேகதாது விவகாரம் : காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு

மேகதாது விவகாரம் : காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு

உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றம்

"மேகதாது அணை திட்டம் குறித்த விரிவான திட்ட அறிக்கையை ஆய்வு செய்ய காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு அதிகாரமில்லை" - தமிழ்நாடு அரசு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

    இறுதி உத்தரவு வரும் வரை மேகதாது பற்றி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது.

    மேகதாது அணை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது. அதில், காவிரி ஆற்றில் கபினி மற்றும் கிருஷ்ணா ராஜ சாகர் அணைப் பகுதிகளில் இருந்து வரும் நீரை கர்நாடக அரசு தடுக்க முயல்வதாகவும்,

    இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது எனவும் குற்றம் சாட்டியுள்ளது.

    Also Read :  பாஜக நிகழ்ச்சிகளில் பங்கேற்க சூர்யா சிவாவுக்கு தடை - அண்ணாமலை உத்தரவு

    67.16 TMC கொள்ளளவு கொண்ட அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தண்ணீர் அளவு முழுமையாக பாதிக்கப்படும் எனவும், மேகதாது அணை, நீர்ப்பங்கீட்டை பாதிக்கும் என்பதால், கர்நாடக அரசின் அணைகட்டும் திட்டத்தை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் நிராகரித்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

    உச்சநீதிமன்ற இறுதி உத்தரவு வரும் வரை மேகதாது அணை குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்க கூடாது என உத்தரவிட வேண்டும் என பதில்மனுவில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

    Published by:Lakshmanan G
    First published:

    Tags: Supreme court, TN Govt