முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு... உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு... உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

காட்சிப் படம்

காட்சிப் படம்

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்திலேயே சீராய்வு மனு தாக்கல் செய்யவும் மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க தடையில்லை என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ரவி என்பவர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அரசு மானியம் உரிய நபருக்கு கிடைப்பதை உறுதி செய்யவே மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கேட்டுக் கொண்டதாக தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடப்பட்டது. மேலும் இது தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவு என்றும் விளக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தமிழ்நாடு அரசின் கொள்ளை முடிவில் தலையிட விரும்பவில்லை என வழக்கை தள்ளுபடி செய்தனர். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்திலேயே சீராய்வு மனு தாக்கல் செய்யவும் மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைப்பதற்கு ஜனவரி 31ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஒருசிலர் இணைக்காததால் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Aadhaar card, EB Bill