முகப்பு /செய்தி /தமிழ்நாடு / திமுக மட்டுமே அறிவுசார்ந்த கட்சியாக நினைத்து கொள்ளாதீர்கள் - உச்ச நீதிமன்றம் காட்டம்

திமுக மட்டுமே அறிவுசார்ந்த கட்சியாக நினைத்து கொள்ளாதீர்கள் - உச்ச நீதிமன்றம் காட்டம்

திமுக

திமுக

இலவச திட்டங்களுக்க எதிரான வழக்கில் திமுக மட்டுமே அறிவு சார்ந்த கட்சி என நினைத்து கொள்ளாதீர்கள் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

இலவசங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மூத்த தலைவர் அஸ்வினி குமார் உச்சநீதிமன்றத்தில் தேர்தல்களின் போது இலவசங்கள் தருவதாக வாக்குறுதி அளிக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும்படி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவில் மத்திய அரசை மட்டுமே எதிர்மனுதாரராக சேர்த்திருந்தார்.

ஆனால், திட்டங்களை மாநில அரசுகள்தான் செயல்படுத்தி வருகிறது. இந்த வழக்கு நாடு முழுதும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வழக்காக உள்ளது. எனவே, மாநில அரசுகளை மனு தாரர்களாக சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்து திமுகவையும் எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்ற உச்ச நீதிமன்ற திமுகவை எதிர்மனுதரராக இணைக்க நீதிபதிகள் அனுமதி அளித்து இருந்தனர்.

இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விகாஸ் சிங், அரசு நலத்திட்டங்களை செய்யக் கூடாது என்று தாங்கள் கூறவில்லை என்றும், தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும் இலவச அறிவிப்புகளை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் வாதாடினார். நலத்திட்டத்துக்கான பணம் எங்கிருந்து வருகிறது என்பதை வாக்காளர் அறிந்திருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Also Read : பாஜகவைச் சேர்ந்த பிக்பாஸ் பிரபலம் நடிகை சோனாலி போகட் மாரடைப்பால் மரணம்.. வைரலாகும் கடைசி வீடியோ

மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துசார் மேத்தா, இலவசங்களை அறிவிப்பது ஒரு கலையாகிவிட்டது எனவும், அது பொருளாதாரத்துக்கு பேரழிவை ஏற்படுத்தும் எனவும் வாதாடினார்.

திமுக தரப்பில் வழக்கறிஞர் வில்சன் ஆஜரான போது, இலவசங்கள் குறித்து திமுக அமைச்சர்கள் அளித்த பேட்டியை பார்த்ததாக குறிப்பிட்ட தலைமை நீதிபதி ரமணா, திமுக மட்டுமே அறிவார்ந்த கட்சி என எண்ண வேண்டாம் எனவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், கிராமங்களில் பசுக்கள் மற்றும் ஆடுகள் வாழ்வாதாரத்தை தருகின்றன என்றும், சில கட்சிகள் பெண்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்குகிறது என கூறிய அவர், எது இலவசம், எது பொதுநலன் என்பதை ஆராய வேண்டும் என்றார்அரசியல் கட்சிகள் இலவசங்கள் குறித்து வாக்குறுதி அளிப்பது முக்கியமானது என்றும், இதுகுறித்து உரிய முறையில் விவாதிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்

First published:

Tags: DMK, Supreme court