ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஜல்லிக்கட்டில் உச்சநீதிமன்றம் கூடுதல் விதிகளை உருவாக்கலாம் - தமிழக அரசு வாதம்

ஜல்லிக்கட்டில் உச்சநீதிமன்றம் கூடுதல் விதிகளை உருவாக்கலாம் - தமிழக அரசு வாதம்

மாதிரி படம்

மாதிரி படம்

விளையாட்டுக்கு முன் காளைகளுக்கு பரிசோதனை நடத்துவது போல், விளையாட்டுக்கு பின் ஏன் சோதனை நடத்துவதில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்த, உச்சநீதிமன்றம் வேண்டுமானால் கூடுதல் விதிகளை வகுக்கலாம் என தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அனுமதி சட்டம் மற்றும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை கோரி, பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கின் விசாரணையின் போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ஜல்லிக்கட்டு கலாச்சாரத்தின் ஒரு பகுதி என வாதாடினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த நடைமுறை மனிதர்களின் நன்மைக்கானது என எப்படி கூற முடியும் என கேள்வி எழுப்பினர். எல்லா செயல்களிலும் ஏதோ ஒரு வகையில், உயிர்கள் பலியாவதாக தமிழ்நாடு அரசு தரப்பில் வாதாடப்பட்டது.

இதையும் படிக்க :  தமிழக கலாச்சாரத்தை பாதுகாக்கவே ஜல்லிக்கட்டு சட்டம் இயற்றப்பட்டது - தமிழக அரசு

விளையாட்டுக்கு முன் காளைகளுக்கு பரிசோதனை நடத்துவது போல், விளையாட்டுக்கு பின் ஏன் சோதனை நடத்துவதில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில், ஜல்லிக்கட்டுக்கு பின்னால் காளைகளுக்கு சோதனை நடத்த அரசு தயாராக உள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கூடுதல் விதிகளை உருவாக்கலாம் என்றும், தமிழ்நாடு அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

வெளிநாடுகளை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அமைப்புகள், தமிழ் கலாச்சாரம் குறித்து பேச எந்த உரிமையும் இல்லை என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பில் வாதாடப்பட்டது.

இதற்கிடையே, நேரடியாக நடத்தப்பட்ட ஆய்வுகளில் காளைகள் காயம் அடைந்துள்ளது தெரியவந்துள்ளதாக பீட்டா அமைப்பு தரப்பில் வாதாடப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது.

First published:

Tags: Jallikattu, Supreme court, TN Govt