ஸ்டெர்லைட் ஆலை வழக்கில், தமிழ்நாடு அரசு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் அங்கு நடைபெற்ற காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து 2018ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.
இதை எதிர்த்து ஆலையை திறக்க வேண்டும் என கோரிக்கையுடன் வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஆலை மூடலுக்கான அரசின் உத்தரவு தொடரும் தீர்ப்பளித்த வேதாந்தாவின் மனுவை தள்ளுபடி செய்தது. உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.
அதில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் வரை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்க கோரி, ஆலை தரப்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டுமெனவும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இவற்றை உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தருசூட் தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தது. இன்றைய விசாரணையில், ஆலையில் இருந்து 11 மில்லியன் டன் அளவிலான ஜிப்சம் நீக்கப்பட்டுள்ளதாக வேதாந்தா கூறிய நிலையில், 4 புள்ளி 5 மில்லியன் டன் மட்டுமே நீக்கப்பட்டுள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:
பசுமை அங்காடிகள் மூலம் கிலோ ரூ.70க்கு தக்காளி..! - அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
ஸ்டெர்லைட் வளாகத்தில் பல மில்லியன் டன் அளவில் ஜிப்சம் நீக்கப்படாமல் உள்ளதாகவும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறியது. அதனை கேட்டுக்கொண்ட நீதிபதிகள், தமிழ்நாடு அரசு மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதில் தர உத்தரவிட்டு ஜுலை மாதம் இரண்டாம் வாரத்தில் அடுத்த விசாரணை நடைபெறும் என கூறியது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.