• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • OPS vs EPS : எதிர்க்கட்சி தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட வேண்டும்... : அதிமுகவில் மீண்டும் சலசலப்பு

OPS vs EPS : எதிர்க்கட்சி தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட வேண்டும்... : அதிமுகவில் மீண்டும் சலசலப்பு

ஓபிஎஸ்- இபிஎஸ்

ஓபிஎஸ்- இபிஎஸ்

தமிழக எதிர்க்கட்சி தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட வேண்டும் என அவரின் ஆதரவாளர்கள் வலியுறுத்தி இருப்பதால், அதிமுகவில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

  • Share this:
    தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ள நிலையில், அதிமுக தரப்பில் எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைகளும், விவாதங்களும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மிக முக்கியமான விவகாரங்களை சட்டமன்றத்தில் எழுப்பி, அதன்மீது விரிவான விவாதம் நடத்தக் கோரவும், சட்டமன்றத்தில் முன்வரிசையில் முதல் இருக்கையில் அமரவும் எதிர்கட்சித் தலைவருக்கு உரிமை உண்டு என்பதால், அந்த பதவிக்கு அதிமுக தரப்பில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

    அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் தேர்விலேயே எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கடும் போட்டியில் ஈடுபட்ட நிலையில், பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின், எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஓ.பன்னீர்செல்வமே முன்மொழிந்தார். தேர்தலில் அதிமுக தோல்வியடைந்துள்ள நிலையில், தற்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கும் இருவருக்கும் இடையே போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், அதிமுக செய்தி தொடர்பாளரான கோவை செல்வராஜ், ஓ.பன்னீர்செல்வத்தையே எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.

    அதிமுகவின் மற்றொரு செய்தி தொடர்பாளரான புகழேந்தியும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

    எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கும் அதிமுகவில் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், மரபின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமிக்கே வாய்ப்பு இருப்பதாக, பத்திரிகையாளர் கோலாகல சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

    Must Read :  தமிழக முதல்வராக இன்று பதவியேற்கிறார் மு.க.ஸ்டாலின்

     

    இதனிடையே சென்னையில் இன்று மாலை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில், எதிர்க்கட்சித் தலைவர் தேர்வு செய்யப்பட்டு, அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: