முகப்பு /செய்தி /தமிழ்நாடு / “படிப்படியாக உயர்ந்தவர்...” முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படக் கண்காட்சியை ரசித்த ரஜினிகாந்த்..!

“படிப்படியாக உயர்ந்தவர்...” முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படக் கண்காட்சியை ரசித்த ரஜினிகாந்த்..!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட ரஜினிகாந்த்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட ரஜினிகாந்த்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்த புகைப்பட கண்காட்சியை நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி அவர் கடந்து வந்த பாதை குறித்து சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு புகைப்பட கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தார். இந்த கண்காட்சியை மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் திறந்து வைத்தார்.

இந்த நிலையில் முதலமைச்சரின் புகைப்படக் கண்காட்சியை நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் பார்வையிட்டார்.  அப்போது, இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் நடிகர் யோகி பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், ‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படிப்படியாக உயர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக உள்ளார் என்றால், அது மக்கள் அவருக்கு கொடுத்த அங்கீகாரம். அவர் நீண்ட நாள் வாழ்ந்து மக்களுக்கு சேவை செய்ய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்’ என தெரிவித்தார்.

First published:

Tags: Chennai, CM MK Stalin, Rajinikanth