Home /News /tamil-nadu /

ஞாயிறு முழு ஊரடங்கு: காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு படையெடுத்த மீன் பிரியர்கள்

ஞாயிறு முழு ஊரடங்கு: காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு படையெடுத்த மீன் பிரியர்கள்

காசிமேடு

காசிமேடு

தொடர் விடுமுறை காரணமாக குறைந்த அளவிலான விசைப்படகுகள் இயக்கப்பட்டதால் மீன்களின் வரத்து குறைவாக இருந்தது. குறைந்த அளவிலான மீன்கள் விற்பனை செய்யப்பட்டதால் மீன்களின் விலையும் உயர்ந்து காணப்பட்டது.

    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. இதனால், மீன் பிரியர்கள் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இன்று அதிகளவு குவிந்தனர்.

    கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுகிழமை முழு நேர ஊரடங்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை என்றாலே விடுமுறை நாட்களில் அசைவ பிரியர்கள் மீன் உண்பது வழக்கம். இதனால், சென்னை காசிமேடு பகுதி திருவிழா போல் காட்சியளிக்கும். அதிகாலை முதலே மீன்களை வாங்க அசைவ பிரியர்கள் மற்றும் சிறு வியாபாரிகள்  குவிய தொடங்குவார்கள்.

    இந்த நிலையில், நாளை முழு  ஊரடங்கு என்பதால் இன்று அதிகாலை முதலே பழைய மீன்பிடி ஏலக்கூடம்  மற்றும் புதிய மீன் விற்பனை தளத்தில் மீன்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. வியாபாரிகள் மீன்களை ஏலம் விடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.சிறு வியாபாரிகள்  பொதுமக்கள் என அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து மீன் வாங்க மீனவர் சங்கத்தினர் ஒலிபெருக்கிகள் மூலம் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் முகக் கவசங்கள் அணியவும் அறிவுறுத்தினர்.

    தொடர் விடுமுறை காரணமாக குறைந்த அளவிலான விசைப்படகுகள் இயக்கப்பட்டதால் மீன்களின் வரத்து குறைவாக இருந்தது.  எதிர்பார்த்த அளவிற்கு மீன்கள் கிடைக்காததால் சிறு வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் குறைந்த அளவிலான மீன்கள் விற்பனை செய்யப்பட்டதால் மீன்களின் விலையும் சென்ற வாரத்தை ஒப்பிடுகையில் உயர்ந்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் சிறு வியாபாரிகள் குறைந்த அளவிலான மீன்களை வாங்கி சென்றன.ர் குறிப்பாக வஞ்சரம் .வவ்வால் போன்ற மீன்களை வாங்காமல் மத்தி. சங்கரா போன்ற மீன்களை பொதுமக்கள் வாங்கி செல்வதை காண முடிந்தது.

    செய்தியாளர்: அசோக்குமார்

    இதையும் படிங்க: இன்றைய கொரோனா தடுப்பூசி முகாமில் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ளலாம்: அமைச்சர் தகவல்

    Published by:Murugesh M
    First published:

    Tags: Corona, Fish, Kasimedu, Lockdown

    அடுத்த செய்தி