• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கணவர் கொடுமைப்படுத்துகிறார்: நடவடிக்கை எடுக்காத போலீஸ் எஸ்.ஐ. மீது, சுந்தரா டிராவல்ஸ் நடிகை ராதா புகார்

கணவர் கொடுமைப்படுத்துகிறார்: நடவடிக்கை எடுக்காத போலீஸ் எஸ்.ஐ. மீது, சுந்தரா டிராவல்ஸ் நடிகை ராதா புகார்

நடிகை ராதா

நடிகை ராதா

காவல்நிலையத்தில் ஒன்றாக வாழ்வதாக கூறிவிட்டு இப்போது கொடுமைப்படுத்துவதாக நடிகை ராதா புகார் அளித்துள்ளார்.

  • Share this:
காவல் உதவி ஆய்வாளர் மீது "சுந்தரா டிராவல்ஸ்" நடிகை ராதா காவல் இணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

"சுந்தரா டிராவல்ஸ்" உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ராதா சென்னை ஆலந்தூர் காவல்துறை தெற்கு மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.அதில், "கடந்த மே மாதம் விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் எனது கணவர் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் வசந்தராஜா மீது புகார் கொடுத்தேன். ஆனால் புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. உதவி ஆய்வாளர் பாரதி என்னையும் வசந்தராஜாவையும் அழைத்து சமாதானம் செய்து வைத்தார். இனிமேல் ஒன்றாக இணைந்து வாழ்வதாக கூறி வசந்தராஜா எழுதி கொடுத்தார்.ஆனால் தற்போது மீண்டும் என்னை கொடுமைப்படுத்துகிறார்.

Also Read:வரதட்சணைக்காக கொடுமைப்படுத்தி பெண்ணை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவர் குடும்பத்தினர் சிக்கியது எப்படி? அதிர்ச்சியூட்டும் தகவல்கள்..!

என்னை பற்றி புகார் கொடுத்தால் என்ன செய்ய முடியும் என கொலை மிரட்டல் விடுக்கிறார். உதவி ஆய்வாளர்கள் பாரதியும், இளம்பரிதியும் என்னுடைய ஆட்கள். உன்னால் ஒன்றும் செய்யமுடியாது என கூறி மிரட்டி வருகிறார்.காவல் நிலையத்தில் எழுதி கொடுத்துள்ளீர்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்டால் தொடர்ந்து மிரட்டுகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் என்னுடைய புகார் குறித்தும் வசந்தராஜா எழுதி கொடுத்த கடிதத்தை கேட்டேன். ஆனால் கடிதத்தை தரவில்லை. சட்டத்திற்கு முரணாக நடந்து கொண்ட உதவி ஆய்வாளர்கள் பாரதி, இளம்பரிதி மீது காவல்துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னை அடித்து துன்புறுத்திய உதவி ஆய்வாளர் வசந்த ராஜா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று நடிகை ராதா புகாரில் கூறியுள்ளார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: