ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

என் மனைவி குஷ்பு தாக்கப்பட்டது மறக்க முடியாதது - சுந்தர் சி உருக்கம்

என் மனைவி குஷ்பு தாக்கப்பட்டது மறக்க முடியாதது - சுந்தர் சி உருக்கம்

குஷ்பு சுந்தர் சி

குஷ்பு சுந்தர் சி

என் மனைவி குஷ்பு தாக்கப்பட்டது என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று என்று சுந்தர் சி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக நடிகை குஷ்பு களமிறங்கியுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ள குஷ்பு வீடு வீடாகச் சென்று வேட்பாளர்களைச் சந்தித்துவருகிறார். இந்தநிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, ‘2010-ம் ஆண்டு தி.மு.கவில் இருந்த மு.க.ஸ்டாலினுக்கு எதிராக பேசியதற்காக தி.மு.க தொண்டர்கள் என் வீட்டில் கல் எறிந்தார்கள். நான், ஸ்டாலினைப் பார்க்க முயற்சி செய்தபோது அவர் என்னை சந்திக்கவில்லை. சாப்பிட்டுக்கொண்டு இருப்பதாக கூறினார். இதுதான் ஒரு தலைவருக்கு அழகா?’ என்று பேசியிருந்தார்.

  இந்தநிலையில், ஆயிரம்விளக்கு தொகுதி பா.ஜ.க வேட்பாளர் நடிகை குஷ்புவை ஆதரித்து அவரது கணவர் மற்றும் நடிகர் சுந்தர் சி கோடம்பாக்கம் பகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்பொழுது நமது செய்தியாளர் வேல்முருகனிடம் பேசிய அவர், ‘2010-ம் ஆண்டு என் மனைவி குஷ்பு தாக்கப்பட்டது என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. அந்தக் கட்சியின் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்று விட்டு வந்தபோது என் வீட்டில் என் அம்மா மற்றும் குஷ்புவின் அம்மா ஆகிய இருவரும் இருந்தார்கள். என் பெண் குழந்தைகள் இருவரும் இருந்தார்கள். அந்த தருணத்தில் நான் ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்தேன். அப்பொழுது குஷ்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டது. செருப்பை தூக்கி அடித்து முந்தானையை பிடித்து எடுத்து தாக்குதல் நடந்ததைக் கேள்விப்பட்டு பதறிப்போனேன்.

  என் வாழ்வில் மறக்க முடியாத நாளில் அதுவும் ஒன்று. என் வீட்டில் தாக்குதல் நடத்தும்போது நான் பட்ட கஷ்டம் எல்லாம் சாதாரணம் தான். நான் பிரச்சாரத்துக்கு வருவதற்கு அதுதான் விதை. சினிமாவில் காட்டக்கூடிய அரசியலுக்கும் நிஜ அரசியலுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. அது நிழல், இது நிஜம். மக்களைச் சந்தித்து அவர்களின் வாழ்வியலை நேரடியாக தெரிந்துகொள்ள முடிகிறது’என்று தெரிவித்தார்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Karthick S
  First published:

  Tags: BJP, Kushbu, Sundar.C, Thousand Lights Constituency, TN Assembly Election 2021