நிலத்தடி நீருக்கு ஆபத்து, நரம்பு மண்டலம் பாதிக்கும்.. சன் பார்மா நடவடிக்கைகள் மீது சூழலியலாளர்கள் குற்றச்சாட்டு..

நிலம் மற்றும் நிலத்தடியில் உள்ள நீர் என ஐந்து மாதிரிகளை எடுத்து சோதனைக்குட்படுத்தியதில் நான்கு வகையான ரசயானங்கள் அதில் இருந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

நிலத்தடி நீருக்கு ஆபத்து, நரம்பு மண்டலம் பாதிக்கும்.. சன் பார்மா நடவடிக்கைகள் மீது சூழலியலாளர்கள் குற்றச்சாட்டு..
வேடந்தாங்கல்
  • Share this:
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய ஏரியிலிரிந்து 4 கிலோமீட்டர் எல்லையில் சன் பார்மா எனும் நிறுவனத்தின் மருந்து தயாரிப்பு ஆலை செயல்படுகிறது. இந்த ஆலை தனது உற்பத்தி அளவை அதிகரிக்க சமீபத்தில் சுற்றுச்சூழல் அனுமதிகோரி விண்ணப்பம் செய்திருந்தது.

இந்த நிலையில் சென்னை காலநிலை செயல்பாட்டுக் குழு என்கிற அமைப்பு சன் பார்மா நிறுவனத்தின் ஆலை செயல்படக்கூடிய இடத்திற்கு அருகில் உள்ள விவசாயக் கிணறு, நிலம் மற்றும் நிலத்தடியில் உள்ள நீர் என ஐந்து மாதிரிகளை எடுத்து சோதனைக்குட்படுத்தியதில் நான்கு வகையான ரசயானங்கள் அதில் இருந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

குறிப்பாக  நீர்ப்பாசனக் கிணற்றிலிருந்து எடுக்கப்பட்ட  ஒரு மாதிரி  உட்பட மூன்று நீர் மாதிரிகளிலும் டை-புரோமோ-க்ளோரோ மீத்தேன் மற்றும் டை-க்ளோரோ மீத்தேன் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதாகவும், டெட்ரா-க்ளோரோத்திலீன் மற்றும் டோலுயீன் ஆகியவை தொழிற்சாலையின் கீழ்நோக்கி உள்ள ஒரு குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட நீர் மாதிரியிலும், ஆலையில் இருந்து வெளியேறும் மழைநீரை எடுத்துச் செல்லும் நீரோட்டத்திலும் காணப்பட்டதாகவும் சென்னை காலநிலை செயல்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.


சன் பார்மா நிறுவனம் அண்மையில் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "இந்த தொழிற்சாலை ஜீரோ திரவ வெளியேற்ற வசதி கொண்டது" என்று தெரிவித்திருந்தது. ஆனால் சன் பார்மா நிறுவனம் தாமாகவே தங்கள் ஆலையில் பயன்படுத்தும் ரசாயனங்களாக அறிவித்திருந்த டை-க்ளோரோமீதேன் ஆலைக்கு வெளியே எடுக்கப்பட்ட மாதிரிகளில் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் சன் பார்மா நிறுவனத்தின் ஜீரோ திரவ வெளியேற்றம் வசதி தங்களிடம் உள்ளதாக கூறுவதற்கு எதிராக உள்ளதாக சுற்றுச்சூழல் சுகாதார ஆராய்ச்சியாகர் விஷ்வஜா சம்பத் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், மாதிரிகளில் கண்டறியப்பட்ட ரசாயானங்கள் அனைத்தும் மனிதர்களின் மத்திய நரம்பு மண்டத்தை பாதிக்கும் தன்மையுடையது, மேலும் குழந்தைகளின் கருவையும் பாதிக்கக்கூடியதாக இருப்பதால் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இந்த ஆலையின் செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
First published: July 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading