Home /News /tamil-nadu /

சென்னை, மதுரையில் சதம் அடித்த வெயில்... மக்கள் வேதனை

சென்னை, மதுரையில் சதம் அடித்த வெயில்... மக்கள் வேதனை

வெயில்

வெயில்

TN Weather Update : தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரஹீட்டை தொட்டுள்ளது இதனால் மக்கள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.

    தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தொட்டுள்ளது. இந்நிலையில், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

    சென்னையில் மார்ச் மாதத்தின் பகல் நேர வெப்பநிலை சராசரியாக 32.9 டிகிரி ஆகும். ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் செவ்வாய்கிழமை (மார்ச் 22) அதிக வெப்பம் கொண்ட நாளாக பதிவாகியுள்ளது.

    சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கம் ஆகிய வானிலை நிலையங்களில் பகல்நேர வெப்பநிலை 100 டிசிரி ஃபாரஹீட் அளவிற்கு (38 டிகிரி) பதிவாகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மார்ச் மாதத்தில் இது போல இரண்டுமுறை மட்டுமே பதிவாகியுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி 38.3 டிகிரி வெயில் பதிவானது.

    இந்நிலையில், மதுரை விமானநிலையத்தில், 40.2 டிகிரி செல்சியல் (104 ஃபாரஹீட்) வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதேபோல தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்தே காணப்பட்டது.

    வெப்பநிலை விவரம்:





























































































































































































    நிலையம்

    MAXIMUM TEMP

    (º C)


    NORMAL MAXIMUM TEMP

    (º C)


    MINIMUM

    TEMP

    (º C)
    அதிராமபட்டினம்37.233.426.0
    சென்னை(நுங்கம்பாக்கம்)37.633.627.6
    சென்னை (மீனம்பாக்கம்)38.034.626.5
    கோயம்புத்தூர்34.736.723.8
    குன்னூர்22.524.314.7
    கடலூர்36.233.026.3
    தர்மபுரி33.536.621.2
    ஈரோடு36.2--26.0
    கன்னியாகுமரி34.332.726.4
    காரைக்கால்33.332.625.9
    கரூர் பரமத்தி35.537.221.5
    கொடைக்கானல்18.121.411.5
    மதுரைநகரம்39.737.526.4
    மதுரைவிமானநிலையம்40.237.026.1
    நாகப்பட்டினம்34.532.525.9
    நாமக்கல்34.0--21.5
    பாளையங்கோட்டை36.236.225.2
    பாம்பன்35.633.628.1
    பரங்கிப்பேட்டை34.0--23.5
    புதுச்சேரி34.832.825.8
    சேலம்33.537.621.7
    தஞ்சாவூர்35.037.125.0
    திருப்பத்தூர்--37.720.6
    திருச்சிராப்பள்ளி34.536.923.5
    திருத்தணி--36.626.0
    தொண்டி36.332.226.4
    தூத்துக்குடி32.832.826.0
    உதகமண்டலம்--23.68.2
    வால்பாறை30.0---14.5
    வேலூர்37.037.223.9

    37.8 டிகிரி செல்சியஸ் = 100 டிகிரி ஃபாரஹீட்

    Must Read : தண்ணீர் பிரச்னை: திருப்பூரில் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து பொதுமக்கள் மறியல் போராட்டம்

    வெயிலின் தாக்கம் அதிகரித்திருப்பதால், மக்கள் குளிர்ச்சியை தேடிச் செல்கின்றனர். இதனால், குளிர்ச்சியை தர கூடிய தர்பூசணி, மோர், குளிர்பானங்கள் மற்றும் பழங்களின் விற்பனை அதிரிகரித்துள்ளது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Summer Heat, Weather News in Tamil

    அடுத்த செய்தி